Sunday, December 24, 2017

பந்து தண்ணி போட்டுள்ளதா? இப்படி ஆடுது?





பந்து ஏன் நடனம் ஆடுது? சுத்துது?
வணக்கம் சார, நான் ராமுவின் அப்பா, உங்களின் ஆலோசனைப்படி ராமு சில சோதனைகளை எனக்கு செய்து காட்டினான். அவைகள் நம்ம அறிவைத் தூண்டும் படி இருந்தன. ஆனால் அவைகளுக்கான அடிப்படை காரணம் ஏதாவது இருக்க வேண்டும் அல்லவா, அதைப்பற்றி உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என உங்களைப் பார்க்க வந்தோம் சார.
வணக்கம் ஐயா, வாருங்கள், உங்கள் சந்தேகங்களை தெளிவு படுத்தும் முன்னர், அதே விதியை பயன்படுத்தும் இன்னும் சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன்.
சொல்லுங்கள் சார.
ஆகாயவிமானம் பறக்கிறதே, அது எதனால்?
நமது தேசியக்கொடி போன்ற பல கொடிகள் பறக்கின்றனவே, அது எதனால்?
ஒரு பேப்பர ஊதுங்க, என்ன நடக்குது, மேலும் கீழுமாக பறக்குதா இல்லையா?
ஒரு குழாயின் வழியே சென்றுகொண்டிருக்கும் திரவம் அல்லது வாயு குறைவான விட்டம் கொண்ட பகுதியில் செல்லும் போது அதன் வேகம் அதிகரிக்கும் என்பது தெரியுமா?
இது மட்டுமா ஆட்டோமைசர் அப்படீங்கற கருவி, அதாவது,ஷேவிங்கிரீம், ஃப்ளிட் அடிக்கிற கருவி, போன்றவைகள் எந்த தத்துவத்தில் வேலை செய்கின்றன.
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவைகளுக்கெல்லாம காரணம், பெர்னுலி என்ற விஞ்ஞானி சொன்ன தத்துவம் தான, சார்.
பெர்னுலியின் வாழ்க்கை வித்தியாசமானதுங்க.
1700ல பிறந்து, 1782 இறந்துட்டார். டாக்டரா M,D பட்டம் வாங்கிட்டு கணக்கு, இயற்பியல், போன்ற துறைகளிலும் ஆராய்ச்சி செய்தவர்.. பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தந்தைக்கும் இவருக்கும் பல தடவை சண்டைகள் வந்துள்ளன. தந்தை தனக்கு கிடைக்க வேண்டிய பரிசை இவரே பெற்றுக்கொண்டு விட்டார் என்று இவரை வீட்டைவிட்டு அனுப்பிய சம்பவங்கள் உண்டு.
நிறைய ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதியிருந்தாலும், இவர் மருத்துவராகவும் இருந்ததால், ரத்த ஓட்டம் மற்றும் அழுத்தம்., அவைகளுக்கு இடையே உள்ள தொடர்பை அதிகமாக ஆராய்ந்தார். இதுக்குன்னு அவர் என்ன பண்ணார் தெரியுமா, திரவம் பாயந்துகொண்டிருக்கும் குழாயின் பக்கவாட்டில சின்ன துவாரம் போட்டு ஒரு ஸ்டராவ சொருகி அதனால் திரவத்தின் உயரத்துக்கும் அழுத்தத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பதைக் கண்டுபிடித்தார் என்றால் பாரத்துக்கோள்ளுங்கள். இந்த உபாயம் இன்னும் சில இடங்களில் பயனபடுத்துறாங்களாம்.

இது மாதிரி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
அது சரி, பெர்னுலி என்ன சார் சொன்னாரன்னு நீங்க கேட்பது காதுல விழறது.
ஒண்ணுமில்லை சார், ஒரு குழாயின் வழியா செல்லும் திரவம் அல்லது வாயு, குறைவான விட்டம் கொண்ட குழாயின் வழியே செல்லும் போது அதன் வேகம் அதிகரிக்கும், அழுத்தம் குறையும்.
அதாவது
“திரவம் அல்லது வாயு ஒரு குழாயின் வழியே வேகமாகச் செல்லும் போது அதன் அழுத்தம் குறையும் மற்றும் நிலை ஆற்றலும் குறையும்”
ஆங்கிலத்தில் that an increase in the speed of a fluid occurs simultaneously with a decrease in pressure or a decrease in the fluid's potential energy.
The principle is named after Daniel Bernoulli 
பெர்னுலி


இதுவே பெர்னுலி தத்துவம் ஆகும் சார்.
இப்ப நான் முன்னால சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து விளக்களாம்.
ஃபனல் உள்ள ஒரு பந்த போடுங்க, கீழ் வழியா ஊதி பந்த வெளியே எடுங்கன்னு சொல்லியிருந்தோம். ஆனா, உங்களாள மட்டுமல்ல எந்தக் கொம்பனாலும் எடுக்க முடியாது, ஏனெனில், பெர்னுலி விதிப்படி, கீழ் வழியா ஊதற காத்து எல்லாம், பந்துனுடைய பக்கவாட்டில் வழியா வெளியே சென்றுவிடுவதால், பந்த வெளியேற்றத் தேவையான அழுத்தம் கிடைக்காத்தால் வெளியே வரல.
ரெண்டாவதா பண்ண சோதனையில, ஒரு ஓட்டை வழியா, காற்று வரும் வழியில பந்த வச்சோம்ன்னா, பந்து சுழன்றுகொண்டு சுற்றத பாத்தோம். இதுல பம்பல இருந்து அவர் காத்து, பந்தின் பக்கவாட்டின் வழியே சென்றிவிடுவதால பந்து அங்கேயே சுழன்று கொண்டிருக்கிறது.
இதையே காத்துக்கு பதிலா அதிக அழுத்தம் கொண்ட தண்ணீர் செலுத்தினாலும், பந்து அங்கேயே டானஸ் ஆடிக்கொண்டிருக்கும்.
இந்தமாதிரி சோதனைகளை வீடுகளில், கொலு சமயத்தில் செயதீங்கன்னா பாக்கறவங்க வியப்படைவாங்க சார்.

இவைகளை எல்லாம் வீடியோவா கொடுத்துள்ளேன் பாருங்க, புரியும். அவர்களுக்கெல்லாம் நன்றிய தெரிவிச்சுக்கிறேன்.
விமானம் iஇறக்கை

பந்து டான்ஸ் ஆடும் காட்சி



special thanks to the video by
https://www.youtube.com/watch?v=HZClP-m9g24


Saturday, December 9, 2017

பலூன் கிட்ட வருமா?

என்ன ராமு, ஆசிரியர் கிட்ட கேட்டியா, ரெண்டு நாளா நீ சொன்னதுக்கெல்லாம் என்ன காரணம் என்று?
ராமு புத்திசாலி, ஃபனல் உள்ள பந்த எப்படி எடுக்கிறது மற்றும் பந்து எப்படி மேல டானஸ் ஆடுறது, ஆகியவற்றுக்கெல்லாம, ஆசிரியரிடம் இருந்து, பதில் கேட்டுண்டு வந்து இருப்பான்னு நினைக்கிறேன்.
ஆமாம் அப்பா,ஆசிரியரிடம் நீங்க சொன்னது போல எல்லாத்துக்கும் என்ன சார் காரணம், என்ன விஞ்ஞானம் உள்ளது  என்று கேட்டேன். அதுக்கு சார் உடனே,  
கொஞ்சம் பொறுத்துக்கோ, இன்னைக்கு மற்றொரு சோதனை காண்பிக்கிறேன், அதப் பண்ணிப் பார்த்துட்டு வா. எல்லாத்துக்கும் சேர்த்து என்ன காரணம்ன்னு சொல்றேன்” , அப்படீன்னு சொல்லிவிட்டார் அப்பா.
அப்படி என்ன புதுசா சொல்லிக் கொடுத்தார் ராமு
“”இத நம்ம வீட்டுலயே செய்யலாமாம்.  
ரெண்டு பலூன் அல்லது எடை குறைவா உள்ள பந்துகளை அருகருகே இருக்குமாறு ரெண்டு நூல் மூலமா தொங்கவிடவேண்டும். ஆடாம இருக்கும் போது, ரெண்டு பலூனுக்கும் இடையே ஊதணும்.”
இப்ப என்ன ஆகும் ராமு”.
ரெண்டு பலூனும் அருகருகே வரும், ஊதறத நிறுத்திட்டா விலகிச் செல்லும். இதுவும் கூட ஏற்கனவே நாம பாத்தோமே அதே தத்துவத்தில தான் வேலை செய்யறது என்றும் சொன்னார்  அப்பா.”
படம் காண்பிச்சு இருக்கேன் அப்பா பாருங்க.”.
ஆமா,ராமு நீ சொல்றமாதிரி தான் நா வாயால ஊதற போது நெருங்கி வரது, ஆனா நாம நினைச்சது என்னன்னா விலகி செல்லனும்
இதுக்கெல்லாம் காரணம்  ஒரே விதி தானாம், சொல்றேன் அப்படீங்கிறார் அப்பா”.
நானே உங்க ஆசிரியரப் பார்த்து கேட்கலாம்ன்னு இருககேன்,இதுக்கெல்லாம் என்ன காரணம்ன்னு”.

ஆமாம் அப்பா,வாங்கப்பா, ஆசிரியரைப் பாக்கலாம்.” 
விடியோவையும் பாருங்க