“நான் உன்னுடைய நிழலா இருப்பேன்”
“நீ நில்லு சொன்னா நிப்பேன், நடன்னு சொன்னா நடப்பேன்”
வீர வசனம் எல்லாம் மனைவியிடம் கணவன் கல்யாணம் ஆன புசுல சொல்லுவான். ஆனா அப்படி இருப்பானான்னு பாத்தா ரொம்ப குறைவு தான்.
ஆனா அப்படி உன்னுடைய நிழலா இருப்பேன்னு சொல்ற ஒரே ஆள் சந்திரன் தான்.
நம்ம ப்ரண்டு சந்திரன் இல்லீங்க.
பின்ன யாருங்க?
அதாங்க, பூமிய விடாம சுத்திண்டு வர சந்திரன் தாங்க!!!
பூமியின் நிழலா இருக்கும் எப்பவுமே!,!!
பூமிக்கும், நிலவுக்கும் இடையேயான தொலைவு, கிட்டத்தட்ட, 3.84 லட்சம் கி.மீ.,ன்னு சொலறாங்க. பூமியின் ஒரு பக்கம் சூரியனும், மறுபக்கம் சந்திரனும், ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வுகள், ஆண்டுக்கு ஒரு முறையேனும் நடக்கும்
'தானாக ஒளியை வெளியிடும் சக்தி, நிலவுக்குக் கிடையாது; தன் மீது விழும் சூரிய ஒளியைத்தான், அது பிரதிபலிக்கிறது. இதத்தான் நாம சாதாரண நாட்கள்ள சந்திரனின் வெவ்வேறு நிலைகளா பார்க்கிறோம்.
ஆனா
சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே, பூமி வரும் போது ஏற்படுகிறது. இதனால், சூரியன் - பூமி - நிலவு ஆகியவை நேர் கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி, நிலவின் மீது படாத நிலை ஏற்படுகிறது. அதாவது பூமியின் நிழல் சந்திரன் மீது விழும்.
இதை தான், சந்திர கிரகண நிகழ்வு என்கிறோம்.
படத்தப் பாருங்க புரியும்.
முதல் படத்தில் பூமியின் நிழல் முழுதுமா சந்திரனல விழறதினால அது முழு சந்திர கிரஹணம். இரண்டாவது படத்துல் பூமியின் நிழல் பாதி விழறதுனால அது பாதி கிரஹணம்ன்னு சொல்லுவாங்க.
வருஷத்துக்கு ஒரு தடவையாவது இந்த நிகழ்வு நடைபெறலாம்.
இந்த வருஷம் ஸ்பெஷல்.!
ஏன்னா?
:1. ஒரே மாதத்தில் இரண்டு முழுநிலவு, வந்தா அத 'புளு மூன்' என, அழைக்கப்பாங்க. அபூர்வமாக இந்த நிகழ்வு ஏற்படுவதால், இப்படி அழைக்கப்படுகிறது
2. நிலவு நீல நிறத்தில் தெரியும் எனக் கருத வேண்டாம்; அப்படி இருக்காது. விண்வெளியில் உள்ள மாசை பொறுத்து, இன்று சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படலாம்.
3. அதோட இல்லாமல் இன்றைக்கு சந்திரகிரஹணமாகவும் அமைந்துவிட்டது.
இது அடிக்கடி நிகழ்வது இல்லை., 152 ஆண்டுகளுக்குப்பின் இன்று நடக்கிறது. இது, உலக அளவில், வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தெரியும். இந்தியாவில், இன்று மாலை, 5:15 மணிக்கு சந்திர கிரகணம் துவங்குகிறது.
சாதாரணமாக தெரியும் நிலவை விட, 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் இருக்கும்.
எங்கெல்லாம் தெரியும், மற்றும் பல விஷயங்கள் போட்டோவில் காட்டியிருக்கேன்.
பாரக்கத் தவறாதீர்கள். கிரகண சமயத்தில் சாப்பிடலாமான்னு கேட்பது காதுல விழறது. அதப்பத்தி சயின்ஸ் எதுவும் சொல்லாதுங்க
அது உங்க இஷ்டம் !!!