Saturday, April 20, 2019

சொந்தங்கள் நம்மைவிட்டு விலகிச் செலகிறார்களா?

“நம்ம சொந்தங்கள் நம்மை விட்டு விலகிச் செல்கிறார்களா இல்லையா?”
பிஸிக்ஸஇவ்வளவு ஈசியா தலைப்புல இதெல்லாம் எப்படி சார்?”
“அதாங்க, அண்ணன், தம்பி, கொழுந்தியா, அத்தை, மாமன். இவங்கள்ளாம் நம்மை விட்டு எப்பங்க விலகிச் செல்வாங்க?”
“அவங்களுக்குத் தெரியும், எப்ப இருக்கணும் எப்ப விலகணுமன்னு.”
“ஆமாங்க,  நீங்க சொல்றது கரெக்ட்.  நம்மகிட்ட பணம் இல்லைன்னா, என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க, சத்தம் போடாம இருந்த சுவடுகூட தெரியாம நம்ம விட்டு விலகிடுவாங்க.”
“இங்க நா அதப்பத்தி சொல்ல வரலங்க.”
“பின்ன எதப்பத்திங்க?”
“நாம இருக்கோமே பூமி, அது சூரியகுடும்பம்ன்னு சொல்றதுல இருக்கு. “விண்வெளியில, சூரியன்,  நிலா, வெவ்வேறு கிரஹங்கள் போன்றவைகளத்தான் சூரிய குடும்பத்தில் இருக்கு, அதப்பத்தி தான்  சொல்லவரேன்”.
“அவைகள்  அப்படியே அதுபாட்டுக்கும் சுத்திண்டு இருக்கா இல்லை, அவைகள் விலகிச் சென்று கொண்டிருக்கா, அப்படீன்னு தான் கேட்கிறோம்.”
“இதக் கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபமுங்க.
எப்படீங்கிறீங்களா?”
“இதுக்குத்தான் பிஸிக்ஸ் பயன்படுதுங்க”.
“எப்படி சார்ன்னு கேட்கிறீங்களா?”
“பின்னால வர விஷயத்த படீங்க, உங்களுக்கே புரியும்.”
“இதப்பத்தி சொல்றதுக்கு முன்னால
 கொஞ்சம் அமைதியா இருந்து கொஞ்சம் கவனி. ஒரு ஆம்புலனஸ் வேகமா வர மாதிரி தெரியல?”


“ஆமாம் சார். சத்தம் அதிகமா வரதப் பாத்தா அப்படித் தான் தெரியுது சார்.”
“இதே மாதிரி தான் தம்பி, ரயில்வே ஸ்டேஷன்ல கூடப் பாத்திருப்பே”.
“ஆமாம் சார் ரெயில் நம்மை நோக்கி வரும்  போது அது உண்டாக்கும் சப்தம் அதிகரிக்கிறது.”
“ஆமாம் தம்பி,  ரயில் நம்மள நோக்கி வரும் போது ‘சப்தம்’ மாறது இல்லைப்பா, ‘அதிர்வெண்ணுல’ தான் மாற்றம் ஏற்படும். அதே மாதிரி,  ரயில்  நம்மை விட்டு  விலகிச் செல்லும் போதும் இதே மாதிரி மாற்றம் ஏற்படும்.  அதாவது நம்மை நோக்கி வரும் போது அதிர்வெண் அதிகரித்தும்,  நம்மை விட்டு விலகும் போது அதிர்வெண் குறைவதும் நடக்கும்.  இது ரயிலுக்கு மட்டும் இல்லை தம்பி,  சப்தம் போட்டுக்கொண்டு நகரக்கூடிய எல்லாப் வாகனங்களுக்கும் பொருந்தும்.”


“வேற எதுக்கெல்லாம் சொல்லலாம் சார்.”
“இது ஒலிக்கு மட்டுமில்லை தம்பி,  ஒளிக்கும் ( LIGHT) பொருந்தும்ன்னு கண்டுபிடிச்சு இருக்காங்க. “
“இத யார் சார் கண்டுபிடித்தார்.”
“டாப்ளர் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தது. அதனால இது டாப்ளர் விளைவு  என்று சொல்வார்கள். சோகம் என்னன்னா, இதச் சொன்ன டாப்ளர், அவரோட காலத்துல யாரும் நம்ப மாட்டேன்னுட்டாங்க. அதுக்குப் பிறகு தான் இதன் மகிமை எல்லோருக்கும் புரிஞ்சது. அதற்குப்பின் அதன் உபயோகம் பல மடங்கு அதிகரித்து
உள்ளது.
“வேறே எங்கெல்லாம் இத பயனபடுத்தறாங்க?”
“இந்த விளைவை பயன்படுத்தி ஒரு பொருள் எத்தனை வேகத்தில் பயணிக்கிறது. நம்மை நோக்கி வருதா, அல்லது நம்மை விட்டு விலகிச் செல்லுகிறதா, நம்மை நோக்கி வர எத்தனை நேரம் ஆகும் போன்றவற்றை எல்லாம் டாப்ளர் விளைவைப் பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியும். இது மட்டும் இல்லை, அண்டவெளியில் நாம மற்ற கிரஹங்களை விட்டு விலகிச் செல்கிறோம் என்பதை இந்த விளைவின் மூலமாகத்தான் கண்டுபிடித்துள்ளாரகள்.”
“எப்படி சார், இதகண்டு பிடிப்பார்கள்.
“கண்ணால பாக்கிற ஓளிய ஊதாலேர்ந்து சிவப்பு வரைக்கும், அப்படீங்கற மாதிரி, அலைநீளத்துக்கு தகுந்த மாதிரி பிரித்துக் கொள்வார்கள். ஊதாவின் அலைநீளமானது குறைவு. சிவப்பு ஒளியின் அலைநீளமானது அதிகம். இவைகளின் அதிரவெண் நேர் எதிரானது. முன்னால நான் சொன்னமாதிரி, நம்மள நோக்கி  வாகனம் வந்தா, அதிர்வெண் அதிகமாகும்ன்னு சொன்னபடி, வானத்துல நாம சோதிக்கிற பொருளின் வண்ணம் சிவப்பு நோக்கி போனால், அந்தப் பொருள் நம்ம விட்டு விலகிச் செல்லுதுன்னும், ஊதாவை நோக்கிப் போனால், நம்ம நோக்கி வருதுன்னும் கொள்ளலாம். அந்த மாதிரி ஆராய்ச்சி பண்ற போதுதான், வான்வெளி விரிவடைந்து கொண்டு இருக்குன்னு கண்டுபிடித்துள்ளார்கள்.
(Expanding universe)  என்ற தத்துவம் அதில் இருந்து தான் வந்துள்ளது.”
“இது மட்டுமில்லை தம்பி, மருத்துவத்தில் இன்னும் பல இடங்களில் கூட இந்த விளைவு பயன்படுது தம்பி.”
“நான் உனக்கு அஸ்திவாரம் தான் போட்டு உள்ளேன். நீயா நிறைய படிக்கணும், அப்ப தான் மேல இதப்பத்தி உலகத்தில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம் தம்பி.”
“ நிச்சயமாக படிக்கிறேன் சார்.”
“ பிசிக்ஸ் இவ்வளவு ஈசின்னு தெரிஞ்சுக்காம போயிட்டேன் சார்.”