Thursday, June 4, 2020

சமையல் அறையில் சங்கீதம்????

சமையல் அறையில் சங்கீதம்!!!!
என்னய்யா தலைப்பு புதுசா இருக்கு!
சமையல்கட்டுல எப்படியப்பா பாட்டு வரும்?
ஓ, நீங்க பால் காச்சுற போது பாத்திரத்துலேர்ந்து  ஒரு விசில் சத்தம் வருமே, அதச் சொல்றீங்களா?
அதுவும் உண்டு, அதோட சமையல் பண்ற குக்கரும் ஒரு விசில் கொடுக்குமே, அதையும் சேர்த்துத் தாங்க சோல்றேன். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பாத்திரங்கள்,கரண்டி மற்றும் இன்னபிற பொருட்கள் பறக்குமே, அந்த சமயத்துல வர சத்தம் கூட சங்கீதம் மாதிரி தான் இருக்கும் இல்லையா? யாருக்கு சங்கீதமா இருக்கும் அப்படீங்கிறது யார் மேலே கரண்டி விழறதப் பொறுத்து இல்லையா?
அதனால் தான் தலைப்ப அப்படி வச்சேன்  
சமையல் அறையில் பிஸிக்ஸ் எப்படின்னு சொல்லத்தான் இந்த தலைப்பு.

பிஸிக்கல அழுத்தத்துக்கும் வெப்பத்துக்கும் ஒரு தொடர்பு  உண்டுங்க. அதாவது வெப்பத்த கூட்டணும், அதாங்க,  அதிகரிக்கணும்ன்னு வச்சுக்கங்க, அதன் அழுத்தத்தை அதிகரிச்சா வெப்பநிலை கூடும்.அத பாயில் விதிம்பாங்க.
       அழுத்தம்.
உதாரணத்துக்கு தண்ணீரின் கொதிநிலை என்ன?
அதாவது பூமியின் மேற்பரப்புல, நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேடு ஆகும். அப்ப தண்ணீரை ஒரு பாத்திரத்துல வச்சு அத சூடாக்கினா கொஞ்ச நேரத்துல கொதிக்க ஆரம்பிச்சுடும் இல்லையா? அதுக்கும் மேல வெப்பத்த கொடுத்தாக் கூட தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும்.  ஆனா வெப்பநிலை 100 டிகிரியத் தாண்டாது. அப்ப நாம கொடுக்கிற வெப்பம் பூரா தண்ணீர ஆவியாவதற்கு போய்விடும்.அப்ப என்னதான் பண்றது?
அதுக்குத் தான் பாயில் விதி சொல்றதப்படி செய்யணும். அதாவது அறையின் அழுத்தத்தை கூட்டினா, நீரின் வெப்பநிலை 100 டிகிறியவிட அதிகமாகும். அறையின்  அழுத்தத்தை கூட்டறது அவ்வளவு சுலபம் இல்லை. அப்ப கண்டுபிடிக்கப் பட்டது தான் பிரஷர் குக்கர். அதுல என்ன நடக்குது,  உள்ள இருக்சிற வாயுவ வெளிய போகாம மூடி விடுகிறோம். அதனால கீழே வெப்பம் கொடுக்கும் போது உள்ள இருக்கும் வாயுவின் அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால உள்ளே உள்ள நீரின் கொதிநிலை பாயில் விதிப்படி 100 டிகிறிய விட அதிகமாகி, உள்ளே உள்ள பொருள் சீக்கிரமா வெந்துவிடும் இல்லையா? பிரஷர் ஓரளவுக்கு மேல் தாண்டினா குக்கர் வெடித்துடும் என்பதால, ஓரு வால்வு வைத்து அந்த சமயத்துல உள்ளே உள்ள அழுத்தம் அதிகமா இருக்கிற காற்றை வெளியே தள்ளிடுகிறார்கள்.அத சேப்டி வால்வு என்பார்கள்.
இது தான் குக்கர் வேலை செய்யும் விதம். இப்ப பாத்தீங்களா பிஸிக்ஸ் எப்படி அடுப்பங்கரை வரை வந்துள்ளது! !!!
அது மட்டுமில்லைங்க வேறே ஒண்ணும் சொல்லப் போறேன். அத அடுத்த பகுதியில் பாப்போம். 
என்ன சரியா?