Wednesday, September 1, 2021

ஆவியாதல்

ஆவியாதல்,  குளிர்தல் நிகழ்ச்சி ஆகும்.

"என்ன தம்பி இப்படி உனக்கு வேர்க்கிறது?"
"ஒண்ணுமில்லை சார், டாக்டர், சுகர் குறையணும்ன்னா தினம் நாலு கிலோமீட்டராவது ஓடணும்ன்னு சொல்லியுள்ளார். அதுக்குத்தான் ஓடிட்டு வந்து ரெஸ்ட் எடுத்துண்டு இருக்கேன். அதனாலே தான் இப்படி வேர்த்து இருக்கு."
"உனக்குத் தெரியுமா தம்பி, வேர்வையை போக்கிறதுக்கு ஒரு சுலபமான வழி இருக்கு."
"விசிறிண்டா வேர்வையேல்லாம் சுலபமா போயிடும் சார். இருங்க விசிறி எடுத்துண்டு வரேன்".
"அதெல்லாம் வேண்டாம் தம்பி. போய் ஃபேனுக்கு அடியில் கொஞ்ச நாழி நின்னு பாரு."
"ஆமாம் சார், என்ன சார் இப்படி குளிர்ச்சியா  இருக்கு,  விசிறிண்டா கூட இப்படி கூலா இருக்காது போல!!!"
"இதுக்கு பேர் "ஆவியாதலால் குளிர்ச்சி" 
(Evoporation means temperature falling)
என்பார்கள். அதாவது எங்கெல்லாம் ஆவியாவதல் நடக்கிறதோ அங்கெல்லாம் குளிர்ச்சி நடக்கும். காரணம் என்னவென்றால் திரவ நிலையில் உள்ள தண்ணீர் (வியர்வை), ஆவியாக வேண்டுமெனில் அது அருகாமையில் உள்ள (உடம்பு) இடத்துல இருந்து வெப்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் அந்த இடத்தின் வெப்பநிலை குறையும். எனவே உடலில் இருந்து வெப்பம் எடுப்பதால் உடல் வெப்பம் குறைந்து குளிர்ச்சியா உணர்கிறோம்."
" ஆமாம் சார் நீங்க சொல்றது சரிதான் சார். இத்தனை நாள் காரணம் தெரியாம இருந்தது."
"அதுக்குத் தான் பிசிக்ஸ் படிக்கணும், தெரியுதா?"

"