என்ன சாப்பிட வேண்டாமா?
என்ன தலைப்பு இது,
சாப்பிட வேண்டாமான்னு.
அப்புறம் எப்படி ஐயா
காலம் தள்ளறது?
நீங்க கேட்கிறது காதுல
விழறது.
நான் சொல்லவறது என்னன்னா
சாப்பிட்டா ஆற்றல் கிடைக்கும், சாப்பிடாமலேயே ஆற்றல் கிடைக்கும்ன்னு சொல்ல வரதா
நீங்க நினைக்க வேண்டாம்.
ஒரு
உதாரணத்துக்காக அத சொன்னேன். எதுக்கு சொல்றேன்னா, விஞ்ஞானிகள் ராக்கெட்
ஏவுகிறார்கள் ராக்கெட் ஏவுற விஞ்ஞானிகள் ஒரு
குறிப்பிட்ட வேகத்தில் ராக்கெட் எடுத்துச் செல்லும்துணைக்கோளை விண்ணில்
செலுத்துகிறார்கள்.ஏவக்கூடிய துணைக்கோள்கள் எந்த வேகத்தில
வெளியே வருதோ அதே வேகத்திலேயே பயணப்பட்டுக் கொண்டிருக்கும். ராக்கெட்
செலுத்தும் வரை தான் எரிபொருள் பயன்படுத்தப்படும், அதற்குப் பிறகு எந்த எரிபொருளும்
தேவை இல்லை.(அது என்னதான் வேகம்ன்னு கேட்பது காதுல விழறது. அதப்பத்தி தனியா
பின்னர் பாப்போம்.)அதத்தான் நான் ஆகாரம் வேண்டாம்ன்னு தலைப்பு போட்டு இருந்தேன்.
ஆமா, கொடுத்த
வேகத்தோட தொடர்ந்து போய்க் கொண்டு இருக்கும். வேகம் குறையாதான்னு கேட்பது சரிதான்.
இந்த ஐடியா யார்
சொன்னான்னு தெரியனுமா?
வேறே யாரு?
நியுட்டன் தான்!!!!
அவர் முன்று
விதிகளை சொல்லி இருக்கார். அதுலே இங்கு பயன்படுத்துவது முதல் விதி.
An object at rest stays
at rest and an object in motion
stays in motion with the same speed and in the
same direction unless
acted upon by an unbalanced force
அது என்னய்யா முதல் விதி?
“புற விசைகள் ஏதும் செயல்படாத வரையில், நின்று கொண்டு
இருக்கும் பொருள் நின்று கொண்டும், நகர்ந்து இருக்கும் பொருள் நகர்ந்து கொண்டும்
இருக்கும்.”
அதானால் தான் நான் முன்னரே சொன்னமாதிரி ராக்கெட்டில்
இருந்து செலுத்தப்பட்ட துணைக்கோள் அதே வேகத்தோடு செல்லுகிறது என்பது முதல்
விதியின் உதாரணம்.
வேறே உதாரணம் சொல்லன்னுன்னா, பூமி மற்றும் மற்ற கிரஹங்கள்
ஒரு நிமிஷம் கூட நேரம் மாறாம சுத்திண்டு இருக்க காரணம் இதே விதி தான் காரணம்.
அப்ப நிக்கிறவங்க நின்னிண்டே தான் இருக்கனுமா? ஆமாங்க,
அதுதான் விதி.
அப்படின்னா ஒரு பந்தை உருட்டி விட்டா கொஞ்ச தூரம் போயிட்டு
ஓடாம நின்னிடுது?
நல்லா கேட்டிங்க. நீங்க ஒட்டி விடற பந்து, எந்த தரையிலே
ஓடுதுங்கறதப் பொறுத்து, கொஞ்ச தூரமோ அல்லது அதிக தூரமோ ஓடும், அப்புறம்
நின்னிடும். அங்க தான் நியுட்டன் சொன்னாருல்ல, புறவிசைன்னு,,
அது தடுப்பதால தான் நின்னிடுதுங்க.
அதுமாதிரி தான் நீங்க உக்காந்து இருப்பதை உக்காரவிடாமல்
தடுப்பதும், ஓடிக்கொண்டு இருக்கும் உங்களை ஓடவிடாமல் தடுப்பதும் அந்தப் புறவிசை
தான்.
இங்க கொடுத்த லிங்க கிளிக் பண்ணிப் பாருங்க. முதல் விதியை
பிரமாதமா சொல்லி இருக்காங்க.
அந்தப் புறவிசை நல்லவனா கெட்டவனா/
அந்தப் புறவிசை வேணுமா வேண்டாமா?
இதெல்லாம் அந்த முதல் விதியோட சித்து விளையாட்டு!!!!!
அடுத்த எபிசோடுக்கு தயாராகுங்க, பிசிக்ஸ் ஈசியா
கத்துக்கலாம்