Friday, February 3, 2017

என்ன காபி சூடா இருக்கா?


என்ன காபி சூடா இருக்கா?

பிசிக்ஸ் அவ்வளவு ஈசியான்னு போன பதிப்புல கேட்டு அதுக்கு பதிலா ஒரு விஷயம் விளக்கி இருந்தேன். அதே போல இப்பவும் ஒரு விஷயம் சொல்லலாம்ன்னு இருக்கேன்,.

மேல தலைப்பைப் பாத்திக்கிங்கல்ல

ஆமாங்க அதப் பத்திதான் சொல்லப்போறேன்.

அப்பா, அம்மா கொடுத்த காபி ரொம்ப சூடா இருக்கா?

ஆமாம், அதுக்குத்தான் டபரா கொடுத்து இருக்காளே, அதப் பயன்படுத்தி ஆத்திக்கிறேன், நீ ஏண்டா கவலைப் படறே?

அதுக்கு இல்லப்பா, எங்க ஆசிரியர் அதப்பத்தி சொன்னத உன்கிட்ட சொல்லலாம்ன்னு தான் கேட்டேன்.

அப்படி என்னதான் உங்க ஆசிரியர சொன்னார்.

டபரா பயன்படுத்தி ஆத்த வேண்டாம் அப்பா, சும்மா காப்பிய வச்சுண்டு கொஞ்ச நாழி இருந்தாலே அது ஆறிடுமாம், அதோட வெப்பநிலை குறைஞ்சுடுமாம், அதுக்குப் பிறகும் குறையல்லைன்னா மட்டும் ஆத்திக்கலாம்ன்னு சொன்னார் அப்பா.

அதெப்படிடா தானா வெப்பநிலை உடனே குறைஞ்சுடும்?

வெளிநாட்டுக்காரங்க காபி எதுல சாப்பிடறாங்கன்னு நீங்க பாத்து இருப்பிங்க. கப் மற்றும் சாசர் பயன்படுத்துவாங்க இல்லையா? எதுக்காக? கப் காபியை சாசர்ல ஊத்துவாங்க இல்லையா? ஏன்னா, கப்புல இருக்கிற காபியை விட சாசர்ல இருக்குற காபி வேகமா ஆறிடும்ன்னு தான்.

இதெல்லாம் எதுக்கு?

அதாவது காபியோட வெப்பநிலை அறை வெப்பநிலையை இரண்டுக்கும் இரண்டுக்கும் வித்தியாசம் அதிகமாக இருந்தால், காபியின் வெப்பம் வேகமாக குறையும். அதே சமயத்தில் வித்தியாசம் குறைவாக இறந்தால் காபியின் வெப்பம் குறைவது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால தான் சூடா இருக்கும் காபியை ஆத்தாம வச்சுருந்தா வேகமா ஆறிடும். அதுக்குப் பிறகு அதை ஆத்திக்கலாம்.

இதுக்குக் கூட விதி இருக்கான்னு கேட்கலாம்.

ஆமாங்க, அதத் தான் நியுட்டன் விதியா சொல்லி இருக்கார்..

அதாவது, “ஒரு வெப்ப பொருளின் குளிர்தல் விகிதம், அந்த வெப்ப பொருள் மற்றும் வெளி வெப்பநிலை இவற்றின் வித்தியாசத்துக்கு நேர் விகிதத்தில் உள்ளது”

இது தான் நியுட்டனின் குளிர்தல் விதி ஆகும்.

இப்ப புரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

இனிமே சூடான காபி, பால் போன்றவைகள் கொடுத்தா கொஞ்ச நேரம் விட்டிங்கன்னா போதும். தானாகவே குளிர்ந்து விடும்.








1 comment:

  1. குளிர்தல் விதி விளக்கம் அருமை ஐயா...

    ReplyDelete