Friday, March 3, 2017

சமையல் அறையில் பிசிக்ஸ்!!!!!!!!!


சமையல் அறையில் பிசிக்ஸ்!!!!!!!!!

என்னது? சமையல் அறையில பிசிக்ஸா?

அப்படி என்னங்க சமையல் அறையிலே இருக்குனு நீங்க கேட்பது எனக்கு புரியுது. அப்படி என்ன தத்துவம் இருக்குன்னு பாக்கிறிங்களா?

முன்னால நான் எழுதின “ஆணிப் படுக்கையில் படுக்கலாம்”, அப்படின்னு தலைப்பை படிச்சிங்கன்னா, உங்களுக்குத் தெரிஞ்சு இருக்கும், அதுல கூர்மையா இருக்குற ஆயுதத்தில நாம் அதிமா அழுத்தம் கொடுக்க வேண்டாம்ன்னு சொன்னேன். குறைவான அழுத்தம் கொடுத்தாலே பொதும். அதே தான் இங்கேயும்.

அரிவாள்மனை காய்கறி நறுக்கப் பயன்படுத்துரோமே, அதப் பாருங்க, அது கூர்மையா இருப்பதால் தான் ஈசியா நறுக்க முடியுது  இல்லையா, அப்ப பிசிக்ஸ் தான் சமையல் அறையில் பயன்படுத்தப் படுகிறது இல்லையா.அதே போல கத்தியின் கூர்மை தான்







காய்கறியை நறுக்குது இல்லையா?
அது மட்டுமா? வேறே என்ன சார்ன்னு நீங்க கேட்பது காதுல விழுது.
 குறடு பாத்து இருப்பீங்க, சமையல் அறையில் ஆணி பிடுங்க கத்தரிக்கோல் பாத்து இருப்பீங்க இல்லயா, அது என்ன?
இவையெல்லாம் பிசிக்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்ப்போம்.



முடியுமா?
  முடியும்.   பாருங்கள், படத்தை!!!!
கட்ட்டம் கட்டும் கொத்தனார்கள், ஒரு பெரிய கடப்பாரையைப் பயன்படுத்தி, குறைவான முயற்சியில் நகர்த்திக் காட்டுவார்கள்.
இதுக்குப் பெயர் தான் நெம்புகோல் தத்துவம் என்பார்கள்.
அதென்ன நெம்புகோல் கொள்கைன்னு கேட்கிறீங்களா?
பார்க்கில சீசான்னு ஒரு விளையாட்டு, குழந்தைகள் விளையாடுவாங்களே, பாத்து இருப்பீங்க.அதுலெ குழந்தைகள் இரு பக்கமும் உக்காந்து இருப்பாங்க. ரெண்டு பக்கமும் சம்மான எடை இருந்தா, அது ஆடாது, ஆனா எந்தப் பக்கம் அதிகமான எடை இருக்கோ, அந்த பக்கம் இறங்கி விடும்.




நெம்புகோல் மூன்று விதம் உண்டு 
அத படத்துல பாருங்க
முக்கோணம் மாதிரி இருக்குல்ல அது இருக்கிற்தைப் பொறுத்து.நெம்புகோல் மூணு வகைப்படும் 

முதல் வகையில் முக்கோண மாதிரி இருக்கிற (சுழல் இடம்) கத்தி முனை   9நடுவுலெ இருநது, தூக்க வேண்டிய பொருள் பளு(சுமை) ஒரு பக்கமும் ,திறன்(முயற்சி) மற்றோரு பக்கமும் இருந்தால், அது முதல் வகை எனவும், கூறப்படும்
உதாரணம்:  கடப்பாரை, கத்தரிக்கோல்
 































2 comments:

  1. Very Good to read...
    Also visit to my blog : easyhappylifemaker.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. பிரமாதம் சார், தொடர்ந்து படிக்கிறேன். நன்றியுடன்

      Delete