என்ன, கண்ணால் காண்பது பொய்யா?
இல்லையா பின்ன?
பாருங்க, ஒரு வெள்ள ஒளிய ஒரு முப்பட்டகத்தின்
வழியா செலுத்துறேன், அதே வண்ணம் தானே வரணும். ஆனா அப்படியா வரது!!!
பின்ன என்ன வரும்?
பாருங்க படத்த, ஏழு கலர்னா வருது.
ஆமாங்க, ஆச்சர்யமா இருக்கு!!!!! ஊதா கலர்லேர்ந்து சிவப்பு கலர் வரை, ஏழு கலர் வருது.
என்ன மாயம் பண்ணினீங்க?
ஒரு மாயமும் கிடையாது. இதுக்கு பேர் தான்
நிறப்பிரிகைன்னு பேர்.
இதுக்கு தான்
முன்னால சொன்னேன், எதையும் ஆராய்ச்சி பண்ணனும்ன்னு.
இது மட்டுமா? இத்தனை கலர் நமக்குத் தெரியாம
ஒரு வெள்ளை ஒளியில இருக்குன்னு மட்டும் நினைக்காதீங்க. இத்தனை
கலர் மட்டும் தான் கண்ணால பாக்க முடியும்ன்னு உங்களுக்குத் தெரியுமா?
மறுபடியும் என்ன சொல்ல வரீங்க?
அடுத்த படத்தப் பாருங்க. மொத்தமா பட்டையா இருக்கிற அட்டவணையில.
கண்ணால பாக்கிற இடம் எவ்வளவு அகலம் இருக்கு பாருங்க?
இவ்வளவு குறைவா
இருக்கு? ஆமாங்க,
மொத்த அட்டவணையைப் பாக்கும் போது, கண்ணால் பாக்குற
இடம் ஒண்ணுமே இல்லைங்க்கிர்ற மாதிரி தெரியுது!!!!!!
ஆமாம், அத விசிபில் ஸ்பெட்ரம்,
அப்படின்னு ஆங்கிலத்துல சொல்லுவாங்க.
பாக்க முடியாதது
எவ்வளவு அகலமா இருக்கு பாருங்க? அதுல என்னவெல்லாம் இருக்குங்க?
அடுத்த படத்துல
அத விளக்கி இருக்கேன். ஆமாங்க, காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள்,
புறஊதா கதிர்கள், அகச்சிவப்பு கதிர்கள்,
மைக்ரோ அலைகள், ரேடியோ அலைகள் இப்படின்னு அத பிறிச்சு
இருக்காங்க.
எத வச்சு இதெல்லாம்
பிறிச்சாங்க?
அலை நீளம், அதிர்வெண், திசைவேகம் அப்படின்னு சில விஷயங்கள் தெரிஞ்சா நீங்க நன்னாப் புரிஞ்சிப்பீங்க.
படத்தப் பாத்தாலே தெரியும், அலை மாதிரி ஒண்ணு தெரியுது இல்லையா, அதாங்க நீங்க பாக்கவேண்டியது.
குளத்துல கல்ல
விட்டு எறியும்போது என்ன நடக்குது? அலை உண்டாகுது இல்லையா, அதுல சில இடங்க மேடாகவும்
சில இடங்க பள்ளமாகவும் இருக்கும், அது மாதிரி இங்கேயும் ஒளி அலையா
பரவுது.
என்பார்கள், இதுக்கு எடுத்துக்கொண்ட காலம்
𝛕 வினாடிகள்
எனக் கொண்டால் மற்றும் காலத்தின் தலைகீழ் அதிர்வெண் 𝛄 என்பர்.
.
இவைகளுக்கு
இடையே உள்ள தொடர்பு பின்வருமாறு அமையும்/
திசைவேகம்= அதிர்வெண்× அலைநீளம்
C= 𝛄× 𝛌
ஆகும். இது மாதிரி பரவும் மின்காந்த
அலைகள், ஒளியின் திசைவேகத்தில் பரவும். இதில் C என்பதன் மதிப்பு 3×10
ஆகும்
உலகத்திலேயே மிக அதிகமான வேகம் ஒளியின் திசைவெகம் தான். இப்ப மறுபடியும் பாத்திங்கன்னா தெரியும், ஒவ்வொண்ணுக்கும் இத்தனை மீட்டர் நீளம்ன்னு போட்டிருப்பது. ஆக அலை நீளம் அதிகமானா, அதிர்வெண் குறையுங்கிறது. அதனால தான் கண்ணால பாக்கக்கூடிய ஊதா கலரின் அதிர்வெண், சிவப்பு கலரின் அதிர்வெண்ணை விட அதிகம். பொதுவாகவெ அதிர்வெண் அதிகமான ஆற்றல் அதிகம். அதுக்கு தனி வாய்ப்பாடு இருக்கு பின்னால பாப்போம்.
இப்ப தொலைகாட்சி மற்றும் ரேடியோவில், மத்தியானம் வெய்யில் அதிகமா இருக்கும், புறஊதா கதிர்கள் அதிகமா இருக்கும், அதனால வெளியில் போவதைத் தவிருங்கன்னு சொல்றது, இதுக்காகத் தான்.
இன்னும் நிறைய சொல்லணும், அடுத்தமுறை பாப்போம்.
என்ன, பிஸிக்ஸ் ஈசியா இருக்கா?
கொசுறு!!!!!!!!!
சில பேர் சொல்லுவாங்க “இவனுக்குகிட்ட வச்சுக்காத, இவன் நாக்கு நீளம்டா”ன்னு. அப்ப அவங்க எதச் சொல்றாங்கன்னு பரிஞ்சுருக்கும் இல்லையா?
No comments:
Post a Comment