Wednesday, December 18, 2019

என்ன எடைய குறைக்கணும்ன்னா இங்க போகணுமா?
போன பகுதியில நம்மளுடைய எடையை எப்படி குறைக்கறது.
அப்படின்னு கேள்வியோட நிறுத்தி இருந்தேன்.
இப்ப அதப் பத்தி மேல பாத்துட்டு, கடைசியாக அந்தக் கேளவிக்கான பதில பாப்போம்!!!
தல மேல ஆப்பிள் விழுந்து கலங்கி உக்காந்து இருந்தார் ஒருத்தர்னு முந்தின பகுதியில முடிச்சு இருந்தேன்.
யார் இது?
வேற ஒத்தரும் இல்லீங்க. சர் ஐசக் நியூட்டன் தாங்க அவர்.
மளமளவென வேலையில் இறங்கினார். மூணு விதிகளை உருவாக்கினார்.
அவைகள் தான் நியூட்டனின் “இயக்கவியல் விதிகள்” என்று சொல்லப்படும் “NEWTONS LAW OF MOTION”, ஆகும்.
அதப்பத்தி நாம முன்னாலயே பாத்து இருக்கோம்.
மேலே போன பொருள் ஏன் கீழே விழரது? இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடினதுல கிடைச்சது தான், பூமி எல்லாப் பொருட்களையும் தன்னை நோக்கி இழுத்துக் கொள்கிறது என்கிற புவிஈர்ப்பு முடுக்கம் எனும் தத்துவம். அது மட்டுமில்லைங்க, சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் எல்லா கிரஹங்களுக்கும் இது பொருந்தும் என்றும் சொன்னார்.
இப்ப உலகத்துல உள்ள நாடுகள் இவருடைய தத்துவத்தைப் பயன்படுத்தி தான் ராக்கெட்டுகளை ஏவுகிறாரகள் என்றால் பாத்துக்கங்க!

இதுல முக்கியமானது என்னவென்றால், ‘புவிஈர்ப்பு முடுக்கம்’, என்று சொல்லக்கூடிய, ‘g’, (acceleration due to gravity)எனபது தான்.
போன பகுதியில அதப்பத்தி கொஞ்சம் பாத்தோம். அதுல “நிறை”, “எடை” ரெண்டும் ஒண்ணா அல்லது வெவ்வேறா, என்ன வித்தியாசம் போன்றவைகளைப் பத்தி பாத்தோம். ரெண்டும் இதுல முக்கியமானது என்னவென்றால், ‘புவிஈர்ப்பு முடுக்கம்’, என்று சொல்லக்கூடிய பூமி எல்லாப் பொருட்களையும் ஈர்க்க க்கூடிய தன்மை என்ற விஷயம்.
அதுல தான் எடை என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது, மாறக்கூடியது என்று பாரத்தோம். இடத்துக்கு இடம் மாறும்ன்னு சொன்னேன்.
 

ஆமாம், பூமியின் மேற்பரப்புல இருக்கும் எடை, பூமியின் மையத்தை நோக்கிச் செல்லும் போது மாறுமாம். கீழே ஒரு சமன்பாடு கொடுத்துள்ளேன் பாருங்க.
அதாவது, ‘g ங்கிறது பூமியின் மேற்பரப்புல இருக்கும் புவிஈர்ப்பு முடுக்கம்ன்னு வச்சுக்கங்க, g1’ங்கிறது பூமியின் கீழே ‘h’மீட்டர் ஆழத்தில் உள்ள புவிஈர்ப்பு முடுக்கம் எனக் கொண்டால், அத இரண்டையும் இணைக்கும் சமன்பாடு,
                             g1=g(1-h/R)  
என கண்டுபிடித்துள்ளார்கள். இதுல என்பது, பூமியின் ஆரம். எனவே பூமியின் மேற்பரப்பில் இருந்து கீழே இறங்க இறங்க, g மதிப்பு குறைந்து கொண்டே வரும். மதிப்பு R  மதிப்புக்கு சம்மாகும் போது g1 சுழியாகும். அதாவது புவிஈர்ப்புமுடுக்கம் சுழியாகும்.
அப்படின்னா, எடை என்னவாகும்?
ஆமாம், நீங்க கேட்பது சரிதான். பூமியின் மையத்துக்கு போனா நமக்கு எடை கிடையாது!!!!
ஆஹா, நல்லது பண்ணீங்க, நம்ம வீட்டுக்காரர், எடைய குறைக்கிறேன் பேர்வழின்னு பாவம் நடக்கிறது, ஆசனம் அது இதுன்னு என்னத்தையோ பண்ணிண்டு இருக்கார். தொப்பை ஒண்ணும் குறைஞ்ச மாதிரி தெரியல!! பேசாம அவர பார்சல் பண்ணி பூமியின் மையத்துக்கு அனுப்பிடலாமன்னு சொல்லுங்க!!!!
இது எப்படி இருக்கு பாருங்க?
இத விட இண்ணொண்ணு இருக்குங்க!
நமக்கு பிடிக்காத ஆள, என்ன பண்ணலாம்ன்னா, பூமியின் மையத்த நோக்கி ஒரு குழி வெட்டி, அதுக்கள்ள தள்ளிட்டா, அவன் மேலுக்கும் கீழுக்குமா ஆடிக்கொண்டு இருப்பானாம்.
அதப்பத்தி உள்ள ஒரு வீடீயோவப் பாருங்க!!!

https://www.universetoday.com/123591/what-if-we-dug-a-tunnel-through-the-earth/

Tuesday, December 17, 2019

எடை குறைக்க என்ன வழி? பகுதி-1

என்னது, எடைய சுலபமா குறைக்க வழி இருக்கா?
மரத்தடியில அவர் ஏதோ சிந்தனைபில் ஆழ்நதிருந்தார். எந்தப் பக்கம் போனாலும் உதைக்கிறதே? என்ன செய்வது?
என்ன முடிவு கிடைக்கும்? நாம் எடுத்து இருக்கும் முடிவு சரியாக இருக்குமா? இப்படி பல சிந்தனையில் சிறிது நேரம் கண்ணசைந்து விட்டார்.
திடீரென்று தலையில் பலமான அடி! திடுக்கிட்டு விழித்துப்பாரத்தால் மேலிருந்து ஒரு பழம் தலையில் விழுந்து சிறிது தூரத்துக்கு ஓடி நின்றது. 
ஆம், அது ஆப்பிள் பழம் தான்!
அது ஏன் தன் தலையின் மீது விழவேண்டும்?
ஆப்பிள் மட்டும் தான் விழுமா, இல்லை எல்லாப் பழங்களுமே விழுமா?
யோசிக்கத் தொடங்கினார்.
உடனே பக்கத்தில இருந்த கல்லைத் தூக்கி எறிந்தார். அது கொஞ்ச தூரம் மேலே போய்விட்டு கீழே தான் விழுந்த்து. 
சிந்திக்கத்துவங்கினார்.

(பிஸிக்ஸ்னா காததூரம் போகும் நம்ம கிச்சா மைண்ட் வாய்ஸ்,”இவர யார் சிந்திக்கச் சொன்னாங்க, வாத்யார் நம்மளப் போய் அந்த விதியைப் படி, இந்த விதியைப் படின்னு கழுத்தறுக்கிறாங்கன்னு”, சொல்றது காதுல விழறது.)

ஏன் கல்லு தூக்கிப் போட்டாலும் கீழே விழறது, பழத்தப் போட்டாலும் கீழே விழறது!!! கொஞ்சம் வேகமா தூக்கிப் போட்டு பாரத்தார். கொஞ்ச அதிகமான உயரம் போயிட்டு மீண்டும் தரையை நோக்கியே விழுந்த்து,
ரெண்டு மூணு நாள் அதே சிந்தனை.
முடிவுக்கு வந்தார்!!
என்ன முடிவு?
யார் முடிவு செய்தார்?
மண்டையக் குடையுதா?
அடுத்த பகுதியில பாப்போம், என்ன சரியா?

Friday, November 29, 2019


“நீரில் கோலம் போடாதே!”
இது நம்ம வீடுகளில் பெரியவர்கள் அடிக்கடி சொல்வது வழக்கம். ஏன் அப்படிச் சொலறாங்கன்னா நீரில் கோலம் போட்டா வீடு விளங்காம போயிடுமாம்.
பிஸிக்ஸ் ரொம்ப ஈசிங்க என்ற தலைப்பில நீரால எப்ப கோலம் போடுவாங்க எனபதப் பத்திப் பாப்போம். அதனால ஒண்ணும் குறைஞ்சுட மாட்டோம். என்ன சரியா?
ரெண்டு பேர் எதிரெதிரா பேசிண்டு இருக்காங்கன்னு வெச்சுக்கங்க. அவங்க ரெண்டு பேரும் ஒரே அதிர்வெண்ணுல பேசிக்கறாங்கன்னு வச்சுக்கங்க, அப்ப அவங்களோட ரெண்டு அலைகளும் சந்தித்தால், அங்க ஒரு படம் உருவாகுமாம். அந்தப் படத்துக்குப் ஒரு பேர் வச்சுருக்காங்க! அது “லிஸ்ஸாஸூஸ் படம்’” ன்னு பேர்.
அத எப்படி சார் பாக்கறது?
அதாங்க நாம பேசிக்கிறத கேடக முடியுமே தவிர எப்படி சார் அலைகளா பாக்கிறது?
கரெகட்!
ஆமாம, அலைகளை பாக்கணும்ன்னா என்ன சார் பண்றது?
அதுக்குத்தான் ஒரு வழி இருக்கு.
நாம ஒரு மைக்ரோஃபோன் முன்னால பேசினோம்ன்னா அது பேச்சை மின் அலைகளாக மாற்றும். அத ஒரு கேதோட் ரே ஆஸிலோகிராஃப் எனகிற அமைப்பில கொடுத்தா அது நாம என்ன பேசறோமோ, அதன் அலை வடிவத்த உருவாக்கிக் கொடுக்கும்.அது தான் நம்முடைய ஒலி வடிவத்தின் படம் ஆகும். 
அந்த அமைப்பை சுருக்கமாக (CRO) சீ.ஆர்.ஓ. என்று அழைப்பாரகள். அந்த அமைப்புல Xதகடு மற்றும  Y தகடுன்னு ரெண்டு அமைப்புகள் இருக்கும். ஒண்ணு கிடை மட்டத்தையும் மற்றது செங்குத்து மட்டத்தையும் அளக்கும். அதனால நாம பேசற ஒலி வடிவம் இரு தகடுல கொடுக்கற போது, அந்த ஒலியின் அதிரவெண், அதன் வீச்சு, எந்தக் கோணத்தில் கொடுக்கப்படுகிற என்பவைகளைப் பொறுத்து படம் அமையும்.
இந்தப் படம் நாம கோலம் போடுவதப் போல இருக்கும்.
இதனால என்ன உபயோகம்?
என்ன படம் திரையில தெரிகிறதோ, அந்தப் படத்த வச்சு, ஒரு தெரிஞ்ச அதிர்வெண்ணை ஒரு தகடுலயும், தெரியாத அதிரவெண்ணை மற்றொரு தகடுலயும் கொடுத்து, வரக்கூடிய படத்த வச்சு மற்ற அதிரவெண்ணைக் கண்டுபிடிப்பாங்க.

இதுதான லிஸ்ஸாஜூஸ் படங்கள் என்று சொலவார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க சொடுக்கி அது காண்பிக்கும படத்தப் பாருங்க, உங்களுக்கே புரியும்.

கீழே 


இப்ப புரியுதா, எப்படி பெண்கள் கோலம் போடறாங்கன்னு?

பாப்போம் அடுத்த பகுதியில் இன்னொரு ஈசியான பிஸிக்ஸ!!!!!!!

Thursday, May 9, 2019

எடை, நிறை என்ன வித்தியாசம்?

Balance for finding weight
Balance for finding tha mass



“என்ன சார் இப்படிச் சொல்றீங்க? இத்தனை நாளும் நிறையும் எடையும் ஓண்ணுதான்னு நினைச்சுண்டு இருந்தேன். அப்படியில்லை ரெண்டும் வேறே வேறே அப்படீன்னு குண்டத் தூக்கிப் போடறீங்க?”
மாணவன் ஆசிரியர் சொன்னதக் கேட்டு மூச்சடச்சு போய் நிலைதடுமாறி, ஆசுவாசப் படுத்திக் கொண்டு மேலே சொன்ன மாதிரி ஆசிரியரிடம் கேட்டான்.
“ஆமாம் தம்பி, நான் சொல்றது தான் சரிப்பா. நிறையும் எடையும் ஒண்ணு இல்லப்பா. ரெண்டும் வெவ்வேறு தான்”
“ஆச்சர்யமா இருக்கு சார். கடையில, காய்கறி மார்க்கெட், இந்த மாதிரி எங்க போனாலும், நாம “ரெண்டு கிலோ ஜீனி கொடுங்க”ன்னோஅல்லது ரெண்டு கிலோ வெண்டைக்காய் கொடுங்க”ன்னு தானே கேட்போம்..இப்ப அத தப்புங்கிறீங்களே சார்.”
“அப்படின்னா நிறையும் எடையும் ஒண்ணு இல்லையா?”
“ஆமாம் தம்பி, நிறைங்கறது பொருள் எதனால் ஆக்கப்பட்டு இருக்கோ, அந்த துகள்கனின் தனித்தனியான நிறைகளின் கூட்டுத்தொகை நிறை என்பார்கள். ஆனால் எடை  என்பது அந்தப் பொருளின் மீது செயல்படும் விசையால் குறிக்கப்படும் தம்பி.”
“அதாவது நிறையை பொதுவா “M” என்ற குறிப்பிடுவார்கள். ஆனால் எடையை “Mg” எனக் குறிப்பிடுவார்கள். இதுல “g” என்பது புவியிருப்பு முடுக்கம் ஆகும். அதாவது  நிறையை புவிஈப்பு முடுக்கத்தால் பெருக்கினா வறது தான் எடை எனப்படும்.தம்பி.” நாம ரொம்ப நாளா இப்படிச் சொல்லியே பழகிட்டோம் இல்லையா, அதனால் தான் உனக்கு ஷாக்கா இருக்கு”
“அப்படின்னா “,”g”,ன்னு நீங்க சொல்ற புவிஈர்ப்பு முடுக்கும் என்ன சார்”?
“ஒரு பொருளை மேலே தூக்கி எறியறேன்னு வச்சுக்க. அது என்ன ஆறது?”
“கொஞ்ச தூரம் மேலே போயிட்டு பூமி ஈர்க்கறதால கீழே வந்துடுது சார். இதத்தான் ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் கண்டுபிடிச்சு சொன்னார்ன்னு படிச்சு இருக்கோமே சார்”.
“சரியாச் சொன்ன தம்பி”
“அப்படீன்னா ஒரு பொருள் ஒரு நிறையில எப்படி சார் சொல்றது. எடையில எப்படி சார் சொல்றது? “
“நல்ல கேள்வி கேட்ட தம்பி.ஒரு பொருள் இத்தனை கிலோகிராம் நிறையுள்ளது என்றும், அதையே இத்தனை நியுட்டன் எடையுள்ளது என்றும் சொல்லவேண்டும் தம்பி.”
“இன்னொன்னு தம்பி., இதுக்கு எல்லாம் எந்த திராசப் பயன்படுத்துவாங்கன்னு தெரிஞ்சுக்கணும் நீ”
“ஆமாம் சார்,அதப் பத்தி கேட்கமறந்துட்டேன் பாருங்க. “
காய்கறிக் கடையில பாத்து இருப்பியஒரு தராசு,  அதான் தம்பி, ஒருபக்கத்துல எடைக் கற்கள் வச்சுட்டு மறுபக்கம் காய்கறி போன்ற பொருட்கள் வச்சு பாத்தாங்கன்னா,அங்க. நாம தெரிஞ்சுக்கிறது “நிறை”ன்னு பேர்.



அப்படி இல்லாம வில் தராசுன்னு,பொருள தொங்கவிட்டு பாத்தாங்கன்னா, அங்க நாம பாக்கிறது “எடை”ன்னு பேர்.
“ஏன் சார் ரெண்டுலுயும் பாக்கிறது ஒரே மாதிரி இருக்குமா இல்லை வித்தியாசமா இருக்குமா?”
“ரெண்டுலயும் ஒரே மதிப்பு தான் வரும், ஆனா வில் தராசுல பாக்கிறதை “நியூட்டன்” என்றும், காய்கறி வாங்கற தராசுல வரது “கிலோகிராம்” என்றும் அழைப்பார்கள்.
அப்ப “g” மதிப்பு மாறுமா சார்”
“நல்ல கேள்வி கேட்ட. அதப்பத்தி அடுத்த பகுதியில் பாப்போமா”
“சரி சார்”.






Saturday, April 20, 2019

சொந்தங்கள் நம்மைவிட்டு விலகிச் செலகிறார்களா?

“நம்ம சொந்தங்கள் நம்மை விட்டு விலகிச் செல்கிறார்களா இல்லையா?”
பிஸிக்ஸஇவ்வளவு ஈசியா தலைப்புல இதெல்லாம் எப்படி சார்?”
“அதாங்க, அண்ணன், தம்பி, கொழுந்தியா, அத்தை, மாமன். இவங்கள்ளாம் நம்மை விட்டு எப்பங்க விலகிச் செல்வாங்க?”
“அவங்களுக்குத் தெரியும், எப்ப இருக்கணும் எப்ப விலகணுமன்னு.”
“ஆமாங்க,  நீங்க சொல்றது கரெக்ட்.  நம்மகிட்ட பணம் இல்லைன்னா, என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க, சத்தம் போடாம இருந்த சுவடுகூட தெரியாம நம்ம விட்டு விலகிடுவாங்க.”
“இங்க நா அதப்பத்தி சொல்ல வரலங்க.”
“பின்ன எதப்பத்திங்க?”
“நாம இருக்கோமே பூமி, அது சூரியகுடும்பம்ன்னு சொல்றதுல இருக்கு. “விண்வெளியில, சூரியன்,  நிலா, வெவ்வேறு கிரஹங்கள் போன்றவைகளத்தான் சூரிய குடும்பத்தில் இருக்கு, அதப்பத்தி தான்  சொல்லவரேன்”.
“அவைகள்  அப்படியே அதுபாட்டுக்கும் சுத்திண்டு இருக்கா இல்லை, அவைகள் விலகிச் சென்று கொண்டிருக்கா, அப்படீன்னு தான் கேட்கிறோம்.”
“இதக் கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபமுங்க.
எப்படீங்கிறீங்களா?”
“இதுக்குத்தான் பிஸிக்ஸ் பயன்படுதுங்க”.
“எப்படி சார்ன்னு கேட்கிறீங்களா?”
“பின்னால வர விஷயத்த படீங்க, உங்களுக்கே புரியும்.”
“இதப்பத்தி சொல்றதுக்கு முன்னால
 கொஞ்சம் அமைதியா இருந்து கொஞ்சம் கவனி. ஒரு ஆம்புலனஸ் வேகமா வர மாதிரி தெரியல?”


“ஆமாம் சார். சத்தம் அதிகமா வரதப் பாத்தா அப்படித் தான் தெரியுது சார்.”
“இதே மாதிரி தான் தம்பி, ரயில்வே ஸ்டேஷன்ல கூடப் பாத்திருப்பே”.
“ஆமாம் சார் ரெயில் நம்மை நோக்கி வரும்  போது அது உண்டாக்கும் சப்தம் அதிகரிக்கிறது.”
“ஆமாம் தம்பி,  ரயில் நம்மள நோக்கி வரும் போது ‘சப்தம்’ மாறது இல்லைப்பா, ‘அதிர்வெண்ணுல’ தான் மாற்றம் ஏற்படும். அதே மாதிரி,  ரயில்  நம்மை விட்டு  விலகிச் செல்லும் போதும் இதே மாதிரி மாற்றம் ஏற்படும்.  அதாவது நம்மை நோக்கி வரும் போது அதிர்வெண் அதிகரித்தும்,  நம்மை விட்டு விலகும் போது அதிர்வெண் குறைவதும் நடக்கும்.  இது ரயிலுக்கு மட்டும் இல்லை தம்பி,  சப்தம் போட்டுக்கொண்டு நகரக்கூடிய எல்லாப் வாகனங்களுக்கும் பொருந்தும்.”


“வேற எதுக்கெல்லாம் சொல்லலாம் சார்.”
“இது ஒலிக்கு மட்டுமில்லை தம்பி,  ஒளிக்கும் ( LIGHT) பொருந்தும்ன்னு கண்டுபிடிச்சு இருக்காங்க. “
“இத யார் சார் கண்டுபிடித்தார்.”
“டாப்ளர் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தது. அதனால இது டாப்ளர் விளைவு  என்று சொல்வார்கள். சோகம் என்னன்னா, இதச் சொன்ன டாப்ளர், அவரோட காலத்துல யாரும் நம்ப மாட்டேன்னுட்டாங்க. அதுக்குப் பிறகு தான் இதன் மகிமை எல்லோருக்கும் புரிஞ்சது. அதற்குப்பின் அதன் உபயோகம் பல மடங்கு அதிகரித்து
உள்ளது.
“வேறே எங்கெல்லாம் இத பயனபடுத்தறாங்க?”
“இந்த விளைவை பயன்படுத்தி ஒரு பொருள் எத்தனை வேகத்தில் பயணிக்கிறது. நம்மை நோக்கி வருதா, அல்லது நம்மை விட்டு விலகிச் செல்லுகிறதா, நம்மை நோக்கி வர எத்தனை நேரம் ஆகும் போன்றவற்றை எல்லாம் டாப்ளர் விளைவைப் பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியும். இது மட்டும் இல்லை, அண்டவெளியில் நாம மற்ற கிரஹங்களை விட்டு விலகிச் செல்கிறோம் என்பதை இந்த விளைவின் மூலமாகத்தான் கண்டுபிடித்துள்ளாரகள்.”
“எப்படி சார், இதகண்டு பிடிப்பார்கள்.
“கண்ணால பாக்கிற ஓளிய ஊதாலேர்ந்து சிவப்பு வரைக்கும், அப்படீங்கற மாதிரி, அலைநீளத்துக்கு தகுந்த மாதிரி பிரித்துக் கொள்வார்கள். ஊதாவின் அலைநீளமானது குறைவு. சிவப்பு ஒளியின் அலைநீளமானது அதிகம். இவைகளின் அதிரவெண் நேர் எதிரானது. முன்னால நான் சொன்னமாதிரி, நம்மள நோக்கி  வாகனம் வந்தா, அதிர்வெண் அதிகமாகும்ன்னு சொன்னபடி, வானத்துல நாம சோதிக்கிற பொருளின் வண்ணம் சிவப்பு நோக்கி போனால், அந்தப் பொருள் நம்ம விட்டு விலகிச் செல்லுதுன்னும், ஊதாவை நோக்கிப் போனால், நம்ம நோக்கி வருதுன்னும் கொள்ளலாம். அந்த மாதிரி ஆராய்ச்சி பண்ற போதுதான், வான்வெளி விரிவடைந்து கொண்டு இருக்குன்னு கண்டுபிடித்துள்ளார்கள்.
(Expanding universe)  என்ற தத்துவம் அதில் இருந்து தான் வந்துள்ளது.”
“இது மட்டுமில்லை தம்பி, மருத்துவத்தில் இன்னும் பல இடங்களில் கூட இந்த விளைவு பயன்படுது தம்பி.”
“நான் உனக்கு அஸ்திவாரம் தான் போட்டு உள்ளேன். நீயா நிறைய படிக்கணும், அப்ப தான் மேல இதப்பத்தி உலகத்தில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம் தம்பி.”
“ நிச்சயமாக படிக்கிறேன் சார்.”
“ பிசிக்ஸ் இவ்வளவு ஈசின்னு தெரிஞ்சுக்காம போயிட்டேன் சார்.”