Wednesday, December 18, 2019

என்ன எடைய குறைக்கணும்ன்னா இங்க போகணுமா?
போன பகுதியில நம்மளுடைய எடையை எப்படி குறைக்கறது.
அப்படின்னு கேள்வியோட நிறுத்தி இருந்தேன்.
இப்ப அதப் பத்தி மேல பாத்துட்டு, கடைசியாக அந்தக் கேளவிக்கான பதில பாப்போம்!!!
தல மேல ஆப்பிள் விழுந்து கலங்கி உக்காந்து இருந்தார் ஒருத்தர்னு முந்தின பகுதியில முடிச்சு இருந்தேன்.
யார் இது?
வேற ஒத்தரும் இல்லீங்க. சர் ஐசக் நியூட்டன் தாங்க அவர்.
மளமளவென வேலையில் இறங்கினார். மூணு விதிகளை உருவாக்கினார்.
அவைகள் தான் நியூட்டனின் “இயக்கவியல் விதிகள்” என்று சொல்லப்படும் “NEWTONS LAW OF MOTION”, ஆகும்.
அதப்பத்தி நாம முன்னாலயே பாத்து இருக்கோம்.
மேலே போன பொருள் ஏன் கீழே விழரது? இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடினதுல கிடைச்சது தான், பூமி எல்லாப் பொருட்களையும் தன்னை நோக்கி இழுத்துக் கொள்கிறது என்கிற புவிஈர்ப்பு முடுக்கம் எனும் தத்துவம். அது மட்டுமில்லைங்க, சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் எல்லா கிரஹங்களுக்கும் இது பொருந்தும் என்றும் சொன்னார்.
இப்ப உலகத்துல உள்ள நாடுகள் இவருடைய தத்துவத்தைப் பயன்படுத்தி தான் ராக்கெட்டுகளை ஏவுகிறாரகள் என்றால் பாத்துக்கங்க!

இதுல முக்கியமானது என்னவென்றால், ‘புவிஈர்ப்பு முடுக்கம்’, என்று சொல்லக்கூடிய, ‘g’, (acceleration due to gravity)எனபது தான்.
போன பகுதியில அதப்பத்தி கொஞ்சம் பாத்தோம். அதுல “நிறை”, “எடை” ரெண்டும் ஒண்ணா அல்லது வெவ்வேறா, என்ன வித்தியாசம் போன்றவைகளைப் பத்தி பாத்தோம். ரெண்டும் இதுல முக்கியமானது என்னவென்றால், ‘புவிஈர்ப்பு முடுக்கம்’, என்று சொல்லக்கூடிய பூமி எல்லாப் பொருட்களையும் ஈர்க்க க்கூடிய தன்மை என்ற விஷயம்.
அதுல தான் எடை என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது, மாறக்கூடியது என்று பாரத்தோம். இடத்துக்கு இடம் மாறும்ன்னு சொன்னேன்.
 

ஆமாம், பூமியின் மேற்பரப்புல இருக்கும் எடை, பூமியின் மையத்தை நோக்கிச் செல்லும் போது மாறுமாம். கீழே ஒரு சமன்பாடு கொடுத்துள்ளேன் பாருங்க.
அதாவது, ‘g ங்கிறது பூமியின் மேற்பரப்புல இருக்கும் புவிஈர்ப்பு முடுக்கம்ன்னு வச்சுக்கங்க, g1’ங்கிறது பூமியின் கீழே ‘h’மீட்டர் ஆழத்தில் உள்ள புவிஈர்ப்பு முடுக்கம் எனக் கொண்டால், அத இரண்டையும் இணைக்கும் சமன்பாடு,
                             g1=g(1-h/R)  
என கண்டுபிடித்துள்ளார்கள். இதுல என்பது, பூமியின் ஆரம். எனவே பூமியின் மேற்பரப்பில் இருந்து கீழே இறங்க இறங்க, g மதிப்பு குறைந்து கொண்டே வரும். மதிப்பு R  மதிப்புக்கு சம்மாகும் போது g1 சுழியாகும். அதாவது புவிஈர்ப்புமுடுக்கம் சுழியாகும்.
அப்படின்னா, எடை என்னவாகும்?
ஆமாம், நீங்க கேட்பது சரிதான். பூமியின் மையத்துக்கு போனா நமக்கு எடை கிடையாது!!!!
ஆஹா, நல்லது பண்ணீங்க, நம்ம வீட்டுக்காரர், எடைய குறைக்கிறேன் பேர்வழின்னு பாவம் நடக்கிறது, ஆசனம் அது இதுன்னு என்னத்தையோ பண்ணிண்டு இருக்கார். தொப்பை ஒண்ணும் குறைஞ்ச மாதிரி தெரியல!! பேசாம அவர பார்சல் பண்ணி பூமியின் மையத்துக்கு அனுப்பிடலாமன்னு சொல்லுங்க!!!!
இது எப்படி இருக்கு பாருங்க?
இத விட இண்ணொண்ணு இருக்குங்க!
நமக்கு பிடிக்காத ஆள, என்ன பண்ணலாம்ன்னா, பூமியின் மையத்த நோக்கி ஒரு குழி வெட்டி, அதுக்கள்ள தள்ளிட்டா, அவன் மேலுக்கும் கீழுக்குமா ஆடிக்கொண்டு இருப்பானாம்.
அதப்பத்தி உள்ள ஒரு வீடீயோவப் பாருங்க!!!

https://www.universetoday.com/123591/what-if-we-dug-a-tunnel-through-the-earth/

1 comment: