Thursday, June 4, 2020

சமையல் அறையில் சங்கீதம்????

சமையல் அறையில் சங்கீதம்!!!!
என்னய்யா தலைப்பு புதுசா இருக்கு!
சமையல்கட்டுல எப்படியப்பா பாட்டு வரும்?
ஓ, நீங்க பால் காச்சுற போது பாத்திரத்துலேர்ந்து  ஒரு விசில் சத்தம் வருமே, அதச் சொல்றீங்களா?
அதுவும் உண்டு, அதோட சமையல் பண்ற குக்கரும் ஒரு விசில் கொடுக்குமே, அதையும் சேர்த்துத் தாங்க சோல்றேன். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பாத்திரங்கள்,கரண்டி மற்றும் இன்னபிற பொருட்கள் பறக்குமே, அந்த சமயத்துல வர சத்தம் கூட சங்கீதம் மாதிரி தான் இருக்கும் இல்லையா? யாருக்கு சங்கீதமா இருக்கும் அப்படீங்கிறது யார் மேலே கரண்டி விழறதப் பொறுத்து இல்லையா?
அதனால் தான் தலைப்ப அப்படி வச்சேன்  
சமையல் அறையில் பிஸிக்ஸ் எப்படின்னு சொல்லத்தான் இந்த தலைப்பு.

பிஸிக்கல அழுத்தத்துக்கும் வெப்பத்துக்கும் ஒரு தொடர்பு  உண்டுங்க. அதாவது வெப்பத்த கூட்டணும், அதாங்க,  அதிகரிக்கணும்ன்னு வச்சுக்கங்க, அதன் அழுத்தத்தை அதிகரிச்சா வெப்பநிலை கூடும்.அத பாயில் விதிம்பாங்க.
       அழுத்தம்.
உதாரணத்துக்கு தண்ணீரின் கொதிநிலை என்ன?
அதாவது பூமியின் மேற்பரப்புல, நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேடு ஆகும். அப்ப தண்ணீரை ஒரு பாத்திரத்துல வச்சு அத சூடாக்கினா கொஞ்ச நேரத்துல கொதிக்க ஆரம்பிச்சுடும் இல்லையா? அதுக்கும் மேல வெப்பத்த கொடுத்தாக் கூட தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும்.  ஆனா வெப்பநிலை 100 டிகிரியத் தாண்டாது. அப்ப நாம கொடுக்கிற வெப்பம் பூரா தண்ணீர ஆவியாவதற்கு போய்விடும்.அப்ப என்னதான் பண்றது?
அதுக்குத் தான் பாயில் விதி சொல்றதப்படி செய்யணும். அதாவது அறையின் அழுத்தத்தை கூட்டினா, நீரின் வெப்பநிலை 100 டிகிறியவிட அதிகமாகும். அறையின்  அழுத்தத்தை கூட்டறது அவ்வளவு சுலபம் இல்லை. அப்ப கண்டுபிடிக்கப் பட்டது தான் பிரஷர் குக்கர். அதுல என்ன நடக்குது,  உள்ள இருக்சிற வாயுவ வெளிய போகாம மூடி விடுகிறோம். அதனால கீழே வெப்பம் கொடுக்கும் போது உள்ள இருக்கும் வாயுவின் அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால உள்ளே உள்ள நீரின் கொதிநிலை பாயில் விதிப்படி 100 டிகிறிய விட அதிகமாகி, உள்ளே உள்ள பொருள் சீக்கிரமா வெந்துவிடும் இல்லையா? பிரஷர் ஓரளவுக்கு மேல் தாண்டினா குக்கர் வெடித்துடும் என்பதால, ஓரு வால்வு வைத்து அந்த சமயத்துல உள்ளே உள்ள அழுத்தம் அதிகமா இருக்கிற காற்றை வெளியே தள்ளிடுகிறார்கள்.அத சேப்டி வால்வு என்பார்கள்.
இது தான் குக்கர் வேலை செய்யும் விதம். இப்ப பாத்தீங்களா பிஸிக்ஸ் எப்படி அடுப்பங்கரை வரை வந்துள்ளது! !!!
அது மட்டுமில்லைங்க வேறே ஒண்ணும் சொல்லப் போறேன். அத அடுத்த பகுதியில் பாப்போம். 
என்ன சரியா?

Thursday, April 16, 2020

ஒளியின் வேகம் பகுதி 3

வேகமா எதுக்குப் போகணும்?
சில சமயங்களில் வேகம் முக்கியமுங்க. ஒருத்தருக்கு உடம்பு முடியலன்னு வச்சுக்குங்க. அவர ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போகணுமன்னா, என்ன செயவீங்க? மாட்டு வண்டியிலயா கூட்டிண்டு போகமுடியும். அவ்வளவு தான் எமலோகத்துக்குத் தான் போகணும். அப்பவேறே என்ன பணறது? வேகமா போற ஆம்புலன்ஸ தானே பயன்படுத்தமுடியும். அதுக்குத் தான் வேகமா போகணுமங்கிறது.!
உடம்பில் சக்கரை அதிகமா இருக்கிறவங்களை டாக்டர் தினமும் நாலு கிலோமீட்டருக்கு குறையாம நடங்கன்னு சொல்றாங்க. ஆக வேகம் வாழக்கையில ரொம்ப முக்கியம்.
இதுல என்ன வேடிக்கை என்னன்னா, நாம இருக்கிற சூரியகுடும்பம்த்தல இருக்கிற கிரஹங்கள் சும்மா நிலையா இல்லாம தானும் சுத்திகிட்டு, சூரியனையும் சுத்திகிட்டு குறிப்பிட்ட வேகத்துல வருதுங்க. உதாரணத்துக்கு பூமி தனக்குத்தானே சுத்திக்கிறது மட்டுமில்லைங்க சூரியனையும் சுத்துதுங்க.
பூமி மணிக்கு 1000 மைல் வேகத்துல சுத்துதாம். இதவிட முக்கியம் என்னன்னா சூரிய குடும்பமும் சுத்துதாம். இது மாதிரி பல சூரியகுடும்பம், எல்லாமே வெவ்வேறு வேகத்தில சுத்துதாம்.
என்ன சார் பூமி சுத்துதுங்கிறீங்க, நாம எப்படி சார் அத தெரிஞ்சுக்கிறது. பூமி சுத்தறபோது அதோட நாமும் சேர்ந்து தான்ன சுத்தறோம். அதனால தான்நமக்கு தெரியல. உதாரணத்துக்கு ஒரு பஸ்ல போய்கொண்டிருக்கோம்ன்னு வச்சுக்கங்க, பஸ்ஸுனுடைய வேகத்துக்கு உள்ளே இருக்கிற எல்லாம் அதே வேகத்துல தான போகுது. அது போலத்தான் பூமி சுத்தும் போது அதன் பக்கத்தில் உள்ள பொருடகளும் அதே வேகத்தில சுத்தும்.
இப்ப ஒரு பொருளை மேலே தூக்கி எறியறீங்கன்னு வச்சுக்கங்க, அது என்ன ஆகிறது? கொஞ்ச தூரம் மேலே போய்விட்டு கீழே வந்துடுது, இல்லையா? ஏன் கீழே வருது? காரணம் பூமி எல்லாப் பொருடகளையும் அதனை நோக்கி இழுப்பதினால தான். அதனை புவிஈரப்பு விசை எனபாரகள். அப்ப பொருடகள் ஈர்ப்பு விசையை விட்டு வெளியே போகணுமன்னா குறிப்பிட்ட வேகத்துக்கு மேல அந்தப பொருளுக்கு கொடுத்தோமன்னா அது பூமியை நோக்கி வராதுல்ல. அந்த வேகத்த, “விடுபடுதிசைவேகம்” எனபாரகள்.
பூமிய பொருத்த அவரை அது மணிக்கு 4000 கிலோமீட்டரகளாக கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது வினாடிக்கு 11.2 கிலோமீட்டர்களாம்.
இப்படி வேகம் முக்கிய பங்கு வகிக்கிறது நம்முடைய வாழ்க்கையிலங்க.

அப்ப வேகத்துக்கு வரையரை இருக்கான்னு நீங்க கேட்பது காதுல விழறதுங்க. அப்படின்னா எதுங்க பெரும திசைவேகம். ஆமாங்க, ஒளி தான் அதிகமான வேகத்துல போகுதாம். நான் சொல்லலைங்க. ஈன்ஸ்டீன் அப்படிங்கிறவர் தான் சொல்லி இருக்கார்ஙக.

வெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும்.இதனை 2.99*108ms−1 அல்லது 3*108ms−1 (வெற்றிடத்தில் மட்டும்) என்றும் கூறலாம்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும்
இது மட்டுமில்லைங்க, ஒளியின் வேகத்த ஒரு மாறிலியாக வைத்துக்கொண்டு நிறைய கணக்குகள்போட்டு இருக்காங்க. அதேமாதிரி ஒளி ஒரு ஊடகத்தின் வழியா போறதுன்னு வச்சுக்குங்க, அதன் வேகம் குறையுமாம். அதே போல ஊடகத்த விட்டு வெளியே வந்துட்டா மீண்டும் அதே வேகத்துல போகுமாம். எப்படின்னா நீங்க சிமெண்ட தரையில ஓடிண்டு இருக்கீங்கன்னு வச்சுக்குங்க உங்க வேகம் ஒரே சீரா இருக்கமில்லை.திடீரென்று மண் தரைக்குப் போறீங்கன்னு வச்சுக்குங்க, அப்ப உங்க வேகம் என்ன ஆகும், குறையமில்லை. அதே போலத்தான் ஒளியின் வேகமும் ஊடகத்துல போகும்போதுகுறையுது.
மேலும் ஒளியின் வேகம் தான் யாரும் செல்லக்கூடிய மிக அதிகமான வேகம். இதனை ஈன்ஸ்டீன்தன்னுடைய ஒப்புமைக் கொள்கை ( Theory of relativity)
யில் உலகத்துல மிக அதிகமான வேகம் ஓளி என்றுஅறுதியிட்டு சொல்லி இருக்கார்

அண்டத்துல ஒரு கோளுக்கும் அடுத்த கோளுக்கும் இடையே உள்ள தொலைவை இத்தனை ஒளி தொலைவில் என்று தான் சொலவாரகள்.
அதாவது ஒளி ஆண்டுகள் என்ற அலகை வைத்துக்கொண்டிருக்கிறாரகள்.
அதாவது ஒளி ஒரு ஆண்டுக்கு எவ்வளவு தொலைவு செல்லுமோ அதனை ஒரு ஒளி ஆண்டு என்பர்.
ஓராண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு (9.4607 × 10¹² கி.மீ) ஒளியாண்டு. எதுக்காக சொலறேன்னா, சூரியனிடமிருந்து ஒளி நம்மை வந்தடைய கிட்டத்தட்ட 8.20 நிமிஷங்கள் ஆகிறதாம். அப்படின்னா அது எவ்வளவு தொலைவில் இருக்கும் என்று கணக்குப் போட்டுப் பாரத்துக்கொள்ளுங்க!!!
ஈன்ஸ்டீன் தன்னுடைய ஒப்புமைக் கொள்கையைப் பத்தி சொல்லும்போது ,,
ஒளியின் வேகம் தான் இறுதி வேகம்ன்னு சொன்னவர், மற்றொன்றையும் சொல்லி இருக்கார்.
என்ன தெரியுமா?
ஒருத்தன் ஒளியின் வேகத்துல போனா என்ன நடக்கும்ன்னு வேற சொல்லி இருக்கார். அதுக்கான சமனபாட்டையும் நிறுவி இருக்கார்ன்னா பாத்துக்கங்க!!
ஒருத்தன் ஒளியின் வேகத்துல போனா அவனுடைய நிறை ஈறீலி என்ற மதிப்பை அடையுமாம்.
அது மட்டுமில்லைங்க.,நேரம்குறைபாடு ஏற்படுமாம். அதாவது, நீங்க ஒளியின் வேகத்துல ஒரு ராக்கெட்டுல போறீங்கன்னு வச்சுக்கங்க, உங்களோட வயசு, கீழே நிலையா அருக்கிற ஒருத்தனுடைய வயச காட்டிலும் குறஞ்சு இருக்குமாம். அதாவது ஒளியின் வேகத்துல ஏதாவது ஒரு கிரஹத்துக்கு போய்விட்டு வந்தோம் என்றால், நம்ம வயசு குறைஞ்சு போயிருக்குமாம்.
நல்ல இருக்குல்ல!!!
இந்த ஐடியாவ வச்சுண்டு நிறைய கதைகள் வந்துருக்கு!!!
இன்னும் அந்த ஒளிய வச்சுண்டு நிறைய எழுதலாம்.
பாப்போம் நேரம் கிடைத்தால்!!!!!!!

Sunday, April 5, 2020

ஒளியின் வேகம் பகுதி 2

வேகம் அப்படின்னா என்னங்க?
ஒரு சினிமால வடிவேலுகிட்ட ஒருத்தர் “இசைன்னா என்னன்னு கேப்பாறே?”
அது மாதிரி தாங்க, நான் கேடபதும்.
ஒரு குறிப்பிட்ட தொலைவை கடக்க எத்தனை நேரம் ஆகுதுன்னு பாருங்க. அப்ப தொலைவை நேரத்தால வகுத்து என்ன வருதோ அதாங்க வேகம்ன்னு.  சொலவாங்க.
அதாவது ஒரு மணி நேரத்துல ஒரு வண்டி 50 கிலோமீட்டர் போகுதுன்னு வச்சுக்கங்க, அப்ப அந்த வண்டியின் வேகம 50கி.மீ/மணிக்கு என்று சொலவார்கள். இதையே வினாடிக்கும் மாத்திக்கலாம்.
எதுக்காக வினாடிக்கும மாத்தணும்ன்னா, பிஸிக்ஸ்ல வேகம்ன்னா, இத்தனை வேகம் வினாடிக்கு இத்தனை கிலோமீட்டர் அல்லது மீட்டருக்கு என்று தான் சொலவார்கள்.
ஒவ்வொண்ணுக்கும் இத்தனை வேகத்தில தான் போகமுடியும்ன்னு இருக்குங்க. இப்ப மனிதன் நடக்கறான்னு வெச்சுக்கங்க, எவ்வளவு வேகமா போகமுடியும். 
ஓட்டப்பந்தய வீரர்கள் தான் வேகமா ஓடுவாங்க. அவங்களும் பந்தயத்தில் தான் தங்களின் வேகத்தைக் காட்டுவாங்க. ஹுசைன் போல்ட் அப்படிங்கிற பந்தய வீர்ர மணிக்கு 29-30 கிலோமீட்டர் வேகத்துல போவாராம். மத்தவங்களோட வேகம் மணிக்கு 4 அல்லது 5 கிலோமீட்டர் தான் இருக்கும்.
ஒரு கதை கேட்டு இருப்பீங்க, அதாங்க ஆமைக்கும் முயலுக்கும் ஓட்டப்பந்தயம் வச்சாங்க. அதுல எப்படி வேகமா போற முயல் தோத்து ஆமை ஜெயிக்கும். அது முயலின் ‘இயலாமை” தான் காரணம்.
இது மாதிரி, வேகமா போற பொருடகளின் லிஸ்ட் பாத்தோம்ன்னா,
ஜப்பான்காரங்க மிக வேகமா போற ரெயில், அதாங்க புல்லட் ரயில், மணிக்கு 300-400 கிலோமீட்டர் வேகத்துல போற மாதிரி தயார் பண்ணிட்டாங்க.

இதவிட வேகமா போகணும்ன்னா, ராக்கெட்டுகளைத் தான் சொல்லணும். பல நாடுகள் தங்களுக்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகமா போற ராக்கெட்டுகளை தயார் செய்து விண்ணுக்கு அனுப்பிக் கொண்டு இருக்காங்க.
இன்னும் பாப்போம் அடுத்த பகுதியில்!!!!!

Friday, March 27, 2020

 ஓளியின் வேகம்.
“என்னங்க இவ்வளவு வேகமாப் போறீங்க! அங்க பாருங்க பக்கத்தில, சைக்கிள்ள போற எட்டாங்கிளாஸ் படிக்கிற பையன, உங்க வண்டிய ஓவரடேக் பண்ணிண்டு போறான். வெக்கமா இருக்குங்க. கொஞ்சம் வேகத்த கூட்டுங்க”.
ஸ்கூட்டியில் 25 கிலோமீட்டர் வேகத்தில போயக்கொண்டு இருக்கும் என்னிடம் பின்னாடி வசதியா உக்காந்துண்டு வரும் என் மனைவி புலம்பல் தான் அது..
இதுக்கெல்லாம் அசறு வேனா நான். இப்படித்தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னால ரோடுல போய்க்கொண்டு இருக்கும் போது, இத்தனைக்கும மணிக்கு 20 கிலோமீட்டர வேகத்தை தாண்டாத என்னை நோக்கி, எங்கிருந்தோ ஒரு குறுக்குச் சந்திலிருந்து ஒரு சின்னப் பையன் வந்து மோதி பதினைந்து நாள் ஆஸ்பத்திரியில் எனக்கு “ஸிருஷை” (கூடவே இருந்து ஆகாரம், மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொடுத்தல், நான் தூங்காம இருக்கும் போது அவங்களும் தூங்காம இருக்கிறது போன்றவைகளைத் தான், அப்படிச் சொலவாங்க) செயததை மறந்துவிட்டாரகள் போல.
ஆமாங்க, வேகம் முக்கியமுங்க! அதவிட விவேகமும் தாங்க!
அது சரி, வேகத்த கூட்டினிங்களான்னு கேட்பது காதுல விழறது.
அது எப்படீங்க முடியும?
அஅந்தந்த இடத்தில இவ்வளவு வேகத்துல தான் போகணும், அப்படின்னு போர்டு வச்சுருக்காங்க இல்லையா?
நான் முன் ஜாக்கிறதை முத்தண்ணாங்க!
எதுக்கு இத்தனை பீடீகை?
ஆமாங்க, பிஸிக்ஸ் இவ்வளவு ஈஸியா என்ற தலைப்பில வேகத்தப் பத்தி லகுவா சொல்லாமன்னு இருக்கேன், அதுக்குத்தான் இத்தனை முத்தாய்பு!!!
சரி, அடுத்த பகுதியில பாப்போம். வேகதப் பத்தி!,
என்ன சரியா?