வேகமா எதுக்குப் போகணும்?
சில சமயங்களில் வேகம் முக்கியமுங்க. ஒருத்தருக்கு உடம்பு முடியலன்னு வச்சுக்குங்க. அவர ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போகணுமன்னா, என்ன செயவீங்க? மாட்டு வண்டியிலயா கூட்டிண்டு போகமுடியும். அவ்வளவு தான் எமலோகத்துக்குத் தான் போகணும். அப்பவேறே என்ன பணறது? வேகமா போற ஆம்புலன்ஸ தானே பயன்படுத்தமுடியும். அதுக்குத் தான் வேகமா போகணுமங்கிறது.!
உடம்பில் சக்கரை அதிகமா இருக்கிறவங்களை டாக்டர் தினமும் நாலு கிலோமீட்டருக்கு குறையாம நடங்கன்னு சொல்றாங்க. ஆக வேகம் வாழக்கையில ரொம்ப முக்கியம்.
இதுல என்ன வேடிக்கை என்னன்னா, நாம இருக்கிற சூரியகுடும்பம்த்தல இருக்கிற கிரஹங்கள் சும்மா நிலையா இல்லாம தானும் சுத்திகிட்டு, சூரியனையும் சுத்திகிட்டு குறிப்பிட்ட வேகத்துல வருதுங்க. உதாரணத்துக்கு பூமி தனக்குத்தானே சுத்திக்கிறது மட்டுமில்லைங்க சூரியனையும் சுத்துதுங்க.
பூமி மணிக்கு 1000 மைல் வேகத்துல சுத்துதாம். இதவிட முக்கியம் என்னன்னா சூரிய குடும்பமும் சுத்துதாம். இது மாதிரி பல சூரியகுடும்பம், எல்லாமே வெவ்வேறு வேகத்தில சுத்துதாம்.
என்ன சார் பூமி சுத்துதுங்கிறீங்க, நாம எப்படி சார் அத தெரிஞ்சுக்கிறது. பூமி சுத்தறபோது அதோட நாமும் சேர்ந்து தான்ன சுத்தறோம். அதனால தான்நமக்கு தெரியல. உதாரணத்துக்கு ஒரு பஸ்ல போய்கொண்டிருக்கோம்ன்னு வச்சுக்கங்க, பஸ்ஸுனுடைய வேகத்துக்கு உள்ளே இருக்கிற எல்லாம் அதே வேகத்துல தான போகுது. அது போலத்தான் பூமி சுத்தும் போது அதன் பக்கத்தில் உள்ள பொருடகளும் அதே வேகத்தில சுத்தும்.
இப்ப ஒரு பொருளை மேலே தூக்கி எறியறீங்கன்னு வச்சுக்கங்க, அது என்ன ஆகிறது? கொஞ்ச தூரம் மேலே போய்விட்டு கீழே வந்துடுது, இல்லையா? ஏன் கீழே வருது? காரணம் பூமி எல்லாப் பொருடகளையும் அதனை நோக்கி இழுப்பதினால தான். அதனை புவிஈரப்பு விசை எனபாரகள். அப்ப பொருடகள் ஈர்ப்பு விசையை விட்டு வெளியே போகணுமன்னா குறிப்பிட்ட வேகத்துக்கு மேல அந்தப பொருளுக்கு கொடுத்தோமன்னா அது பூமியை நோக்கி வராதுல்ல. அந்த வேகத்த, “விடுபடுதிசைவேகம்” எனபாரகள்.
பூமிய பொருத்த அவரை அது மணிக்கு 4000 கிலோமீட்டரகளாக கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது வினாடிக்கு 11.2 கிலோமீட்டர்களாம்.
இப்படி வேகம் முக்கிய பங்கு வகிக்கிறது நம்முடைய வாழ்க்கையிலங்க.
அப்ப வேகத்துக்கு வரையரை இருக்கான்னு நீங்க கேட்பது காதுல விழறதுங்க. அப்படின்னா எதுங்க பெரும திசைவேகம். ஆமாங்க, ஒளி தான் அதிகமான வேகத்துல போகுதாம். நான் சொல்லலைங்க. ஈன்ஸ்டீன் அப்படிங்கிறவர் தான் சொல்லி இருக்கார்ஙக.
வெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும்.இதனை 2.99*108ms−1 அல்லது 3*108ms−1 (வெற்றிடத்தில் மட்டும்) என்றும் கூறலாம்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும்
இது மட்டுமில்லைங்க, ஒளியின் வேகத்த ஒரு மாறிலியாக வைத்துக்கொண்டு நிறைய கணக்குகள்போட்டு இருக்காங்க. அதேமாதிரி ஒளி ஒரு ஊடகத்தின் வழியா போறதுன்னு வச்சுக்குங்க, அதன் வேகம் குறையுமாம். அதே போல ஊடகத்த விட்டு வெளியே வந்துட்டா மீண்டும் அதே வேகத்துல போகுமாம். எப்படின்னா நீங்க சிமெண்ட தரையில ஓடிண்டு இருக்கீங்கன்னு வச்சுக்குங்க உங்க வேகம் ஒரே சீரா இருக்கமில்லை.திடீரென்று மண் தரைக்குப் போறீங்கன்னு வச்சுக்குங்க, அப்ப உங்க வேகம் என்ன ஆகும், குறையமில்லை. அதே போலத்தான் ஒளியின் வேகமும் ஊடகத்துல போகும்போதுகுறையுது.
மேலும் ஒளியின் வேகம் தான் யாரும் செல்லக்கூடிய மிக அதிகமான வேகம். இதனை ஈன்ஸ்டீன்தன்னுடைய ஒப்புமைக் கொள்கை ( Theory of relativity)
யில் உலகத்துல மிக அதிகமான வேகம் ஓளி என்றுஅறுதியிட்டு சொல்லி இருக்கார்
அண்டத்துல ஒரு கோளுக்கும் அடுத்த கோளுக்கும் இடையே உள்ள தொலைவை இத்தனை ஒளி தொலைவில் என்று தான் சொலவாரகள்.
அதாவது ஒளி ஆண்டுகள் என்ற அலகை வைத்துக்கொண்டிருக்கிறாரகள்.
அதாவது ஒளி ஒரு ஆண்டுக்கு எவ்வளவு தொலைவு செல்லுமோ அதனை ஒரு ஒளி ஆண்டு என்பர்.
ஓராண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு (9.4607 × 10¹² கி.மீ) ஒளியாண்டு. எதுக்காக சொலறேன்னா, சூரியனிடமிருந்து ஒளி நம்மை வந்தடைய கிட்டத்தட்ட 8.20 நிமிஷங்கள் ஆகிறதாம். அப்படின்னா அது எவ்வளவு தொலைவில் இருக்கும் என்று கணக்குப் போட்டுப் பாரத்துக்கொள்ளுங்க!!!
ஈன்ஸ்டீன் தன்னுடைய ஒப்புமைக் கொள்கையைப் பத்தி சொல்லும்போது ,,
ஒளியின் வேகம் தான் இறுதி வேகம்ன்னு சொன்னவர், மற்றொன்றையும் சொல்லி இருக்கார்.
என்ன தெரியுமா?
ஒருத்தன் ஒளியின் வேகத்துல போனா என்ன நடக்கும்ன்னு வேற சொல்லி இருக்கார். அதுக்கான சமனபாட்டையும் நிறுவி இருக்கார்ன்னா பாத்துக்கங்க!!
ஒருத்தன் ஒளியின் வேகத்துல போனா அவனுடைய நிறை ஈறீலி என்ற மதிப்பை அடையுமாம்.
அது மட்டுமில்லைங்க.,நேரம்குறைபாடு ஏற்படுமாம். அதாவது, நீங்க ஒளியின் வேகத்துல ஒரு ராக்கெட்டுல போறீங்கன்னு வச்சுக்கங்க, உங்களோட வயசு, கீழே நிலையா அருக்கிற ஒருத்தனுடைய வயச காட்டிலும் குறஞ்சு இருக்குமாம். அதாவது ஒளியின் வேகத்துல ஏதாவது ஒரு கிரஹத்துக்கு போய்விட்டு வந்தோம் என்றால், நம்ம வயசு குறைஞ்சு போயிருக்குமாம்.
நல்ல இருக்குல்ல!!!
இந்த ஐடியாவ வச்சுண்டு நிறைய கதைகள் வந்துருக்கு!!!
இன்னும் அந்த ஒளிய வச்சுண்டு நிறைய எழுதலாம்.
பாப்போம் நேரம் கிடைத்தால்!!!!!!!
>>மணிக்கு 4000 கிலோமீட்டரகளாக கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது வினாடிக்கு 11.2 கிலோமீட்டர்களாம்<< correction: வினாடி means second. One hour has 3600 seconds. So the speed of rotation should be 4000/3600 = 1.11111 km
ReplyDelete