சாமியார் மாதிரி ஆணியில் படுக்கணுமா?
அது என்ன தத்துவம் ஐயா?
“பையன்களா, நீங்க சில இடத்துல ஒரு சாமியார்
நிறைய ஆணிகள் அடித்த பலகை மீது கவலைப் படாம நின்னின்டு இருப்பார், இன்னும் சில இடத்துல படுத்துண்டு
இருப்பாங்க, பாத்து இருப்பிங்க, உங்களுக்கு ஆச்சிரயமா இருக்கும், எப்படி இவங்க
மட்டும் இப்படி ஆணையில படுத்துண்டு இருக்காங்க, குத்தாதா, அப்படின்னு உங்களுக்கு
தோணி இருக்குமே?”
“ஆமாங்க ஸார், அதெப்படி அவங்க இப்படி ஆணி
படுக்கையிலே கவலை இல்லாம படுத்துண்டு இருக்காங்க ஸார்?”
“இது ஒன்னும் கஷ்டம் இல்லை. நிங்களும் இதே
மாதிரி ஆணி படுக்கையில் படுத்துக்கலாம் உங்களுக்கும் ஆணி குத்தாது.”
“என்ன ஸார் சொல்றிங்க, குத்தாதா/””
“ஆமா, இது ஒண்ணும் வித்தை இல்ல, இயற்பியல்ன்னு
சொல்ற பிசிக்ஸ் மூலம் இத நிங்களும் உங்க பிரண்ட்ஸ் கிட்ட செய்து காட்டலாம்
மாணவர்களே.”
“சொல்லிக் கொடுங்க ஸார்.”
மேலே இருக்கும் ரெண்டு படத்தையும் பாருங்க. முதல்
படத்துல சாமியார் கவலை இல்லாம ஆணி அடிச்ச பலகையில் உக்காந்துண்டு இருக்கார்.
இன்னொரு படத்துல ஆணி அடிச்ச பலகையில் ஒருத்தர் கவலை இல்லாம நின்று கொண்டு
இருக்கார்.
இதன் தத்துவும் ஒண்ணும் கஷ்டம் இல்ல.
இதுக்கு பிசிக்ஸ்ல பயன்படுத்தும் சில பதங்கள்
சொல்லணும்.
அது, 1. விசை 2. பரப்பு 3. அழுத்தம்.
விசை பலவகைப்படும்.
பூமி தனக்குத்தானே சுத்திக்கொண்டு சூரியனையும்
சுத்துதுன்னு சொல்றாங்களே அது ஒருவிதமான விசை.இத நாம கண்ணால பாக்க முடியாது. இதத்
தான் நியுட்டன் கண்டுபிடித்தார்.
ஒரு பந்தை மேல தூக்கி எறியும் போது, அது மேலேயா
போயிண்டு இருக்கு, கொஞ்ச தூரம் மேல போயிட்டு கிழே வரதுக்கு என்ன காரணம். அது ஒரு
விசை, அதத்தான் புவிஈர்ப்பு விசை எனப்படும்.
அதப்போல ஒரு பந்தை தரையிலே உருட்டி விடும்போது
அது கொஞ்ச தூரம் போய் நின்னுடது இல்லையா, அதுக்குக் காரணம் விசை தான். அத உராய்வு
விசை அப்படின்னு சொல்வாங்க.
இப்படி பலவிதமான விசைகள் இருக்கு.
பொதுவா விசையை நிறை மற்றும் முடுக்கம்,
இரண்டையும் பெருக்கினால் வரருதான் விசை எனப்படும்.
விசை= நிறை×முடுக்கம்
அதுபோல அழுத்தம் என்பதை விசை÷பரப்பு
என்பதால் கணக்கிடுவார்கள்.
அதாவது விசையை பரப்பால் வகுத்தால் வருவது
அழுத்தம் ஆகும்.
உதாரணத்துக்கு விசை=6 ன்னு வச்சுப்போம் பரப்பு 2 எனில் அழுத்தம் என்ன
வரும் 6/2=3 ன்னு வரும்.
அதே வேளையில் பரப்பு 3 என கூடினால்,
அழுத்தம் 6/3 =2 குறையுது இல்லையா.
அதாவது வகுத்தலில் கீழே உள்ள பதிப்பு கூட கூட
மொத்த மதிப்பு குறையறது இல்லையா, அதனால அழுத்தத்தின் மொத்த மதிப்பு குறையுது.
இந்த ஐடியா தான் மேற்கண்ட படத்தில் சாமியார்
பயன்படுத்துறாங்க.
அதாவது ஒரு குண்டூசி பரப்பை பார்க்கும்போது, பல குண்டூசிகளின்
மொத்த பரப்பு அதிகமாகி அழுத்தம் குறைஞ்சு போயிடுறது தான் காரணம்.
விரல்ல ஒரு குண்டுசியால் குத்திப்பாருங்க,
எப்படி வலிக்குதுன்னு?
அதேசமயம் நிறைய குண்டுசியால் குத்தினா, முன்னால
இருந்த வலி இருக்காது.
ஆமா ஸார், நீங்க சொல்றது கரக்ட் ஸார்.”
ஆமாம், இதே,ஐடியாவத்தான் அந்த சாமியார்களும்
பயன்படுத்துறாங்க
ஏன் ஸார் சாமியர்களுக்குத் தெரியுமா அந்த
பிஸிக்ஸ்?
அதெல்லாம் அவங்களுக்கு எங்க தெரியப்போறது.
குத்து மதிப்பா செஞ்சு பார்க்கறது தான்.’ இதெ ரெண்டு வீடியோவால் காட்டியிருக்கேன்
இந்த வீடியோவில் ஒரு குண்டுசியால் ஒரு பலுன
குண்டுசியால் குத்தறதுக்கும், பல குன்டுசியால் குத்தறதுக்கும் வித்தியாசம் கான்பிக்கப்பட்டு
உள்ளது.
இந்த வீடியோவில் பல பலூன்கள் மீது எப்படி அவைகள்
உடையாமல் இருக்கு என்பதை காட்டுகிறது
இன்னொண்ணு சொல்றேன் கேளுங்க.
வீட்டுலே தேங்கா உடைக்க காய்கறி நறுக்க என்னத்த யன்படுத்துவிங்க
அரிவாள் மற்றும் அரிவாள்மனை ஸார்.
அரிவாளின் மற்றும் அறிவாள்மனையின் ஒரு பகுதி
கூர்மையா இருக்கும் இல்லையா.
ஆமா ஸார்.
கூர்மையா இருக்குற பக்கத்தால தான் தேங்கா
உடைப்பாங்க. இங்கேயும் அதே தத்துவத்தை தான் பயன்படுத்தறாங்க
ஆக எங்கெல்லாம் கூர்மை இருக்கோ அங்கெல்லாம் கொடுக்கவேண்டிய அழுத்தம் குறைச்சல் ஆகும்.
இப்ப புரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்கிறேன், ஏன்
சாமியார்கள் ஆணிப்படுக்கையில் படுத்துண்டு இருக்காங்கன்னு.
நாளைக்கு நாங்களும் இதே மாதிரி செய்து பாக்கறோம்
ஸார்.
ஓகே, இதே மாதிரி மற்றொரு இயற்பியல் தத்துவத்தை
இன்னொரு நாள் பாப்போம்.
விளக்கம் அருமை ஐயா... தொடர வாழ்த்துகள்...
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete