Wednesday, February 7, 2018

வில்லனா, ஹீரோவா?? முதல் பகுதி

வில்லனா, ஹீரோவா?? முதல் பகுதி.
“சார், சைக்கிள்ள டபுளஸ் அடிக்கணும்ன்னா, ஓட்டிண்டு போகும் போது உங்க மனைவிய ஏறச்சொல்றத விட்டுட்டு, இப்படி பின்னால உக்காத்திவச்சு ஸ்டாட் பண்ணிங்கன்னா கஷ்டமாக இருக்காதா சார்”
என்னுடய மாணவன் நான் என் மனைவியை வச்சு சைக்கிள் ஓட்டறதப் பாத்துட்டு தான் மேல சொன்ன கேள்வியை கேட்டான்.
“ஏம்ப்பபா இப்படி கேடகிறே?” மாணவனிடம் கேட்டேன்.
“நீங்க தான சார், பாடம் சொல்லிக் கொடுத்தீரகள், இந்த உதாரணத்தை.”
“நான் சொல்லிக்கொடுத்தேனா?”
“ஆமாம், சார் உராய்வு அப்படிங்கிற பாடத்த நடத்தற போது உராய்வு ரெண்டு வகைப்படும்,  ஒண்ணு நிலையான உராய்வு, (static friction) மற்றொன்று (dynamic friction) ஓடும் போது இயங்கு உராய்வுன்னு”
“ஆமாம் தம்பி. பரவாயில்லையே. நான் எப்பவோ நடத்தின பாடத்தை ஞாபகம் வச்சுண்டு எனக்கு சொல்றயே”
“இல்லையா சார், நீங்க நடத்துற பாடம் பசு மரத்து ஆணி போல பதிந்து இருக்கு சார், அப்பப்ப நீங்க சொலறத எல்லாம் ஞாபகம் வச்சுப்போம் சார்”.
“நன்றி தம்பி”.
மாணவன் சொன்னத மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்தேன்..
ஆமாம், நீங்களே பாத்து இருப்பீர்கள், நிறையபேர் சைக்கிள்ள டபுளஸ் அடிக்கும் போது, பின்னால உடகாரப்போகின்ற நபர் சைக்கிள் ஓடும் போது தான் ஏறுவார். அப்பத்தான் வண்டிய ஓட்டறவருக்கு எந்த சிரமும் இருக்காது.
இதுக்கு காரணம் உராய்வு குறைவா இருப்பதால் வண்டி வேகமாக ஓட்டமுடியும். 
சொல்லிப்பாருங்க, அவர் கிட்ட ஏம்பா இப்படி பணறேன்னு?
அவர் நம்மள பார்த்து, “”லூசா சார் நீங்க?” அப்படின்னு கேட்பார் இல்லையா?
ஆக உராய்வு ஓட்டத்தை தடை செய்கிறது. 
அப்ப இவன் வில்லன் தானே!!!!
இன்னொரு சம்பவம்!!!!
வில்லன் ஹீரோயினை காரில் கடத்தி சென்று கொண்டிருக்கிறான். பின்னால போலீஸ் துரத்திக்கொண்டு வருது. காருக்கு முன்னால் போய் போலீஸ், வில்லன் வண்டிய நிறுத்தச் சொல்லுது. வேறு வழியில்லாமல் வில்லன் பிரேக்கை அழுத்த கார திடிரென நிறுத்தப்படுகிறது.
கொஞ்சம் முன்னால யோசியுங்க.
எந்த தைரியத்தில போலீஸ் வில்லன் காருக்கு முன்னால போறது!!
உராய்வு  இருக்கும், பிரேக்க பிடிச்சு கார நிறுத்திடலாம என்ற தைரியத்தில் தானே!!!
ஆக உராய்வு ஹீரோ தானே!!!!
அப்ப உராய்வு விசை ரெண்டு வித்ததில் செயல்படுவது இல்லையா?
சில இடங்களில் தேவைப்பட்டது, சில இடங்களில் தேவைப்படல.
அப்படின்னா “உராய்வு” ங்கறது என்னங்க?
இயற்பியல்ன்னு, அல்லது பிஸிகஸ்ன்னு சொலறோமே அதுல நியூட்டன்   சும்மா இல்லாம மூணு விதிய சொல்லி இருக்கார். 
வாழ்க்கையே அதுல தாங்க இருக்கு!!!!
அதுல முதல் விதி, “புற விசை செயல்படாத வரை நிலையா இருக்கும் பொருள் நிலையாகவும், இயங்கும் பொருள் இயங்கிக்கொண்டும் இருக்கும்”
அப்படின்னு சொல்லிட்டாரு.
எவ்வளவு அருமையான விதி பாருங்க!!!
ஆமாங்க, வச்சது வச்ச இடத்துல இருக்கும், போய் கொண்டே இருக்கும் பொருள் போயக்கொண்டே இருக்கும்.
கொஞ்சம் சந்தேகம் வரதா?
எங்க சார், அந்த மாதிரி எல்லாம் எங்க சார் நடக்குது, அப்படின்னு சொல்லத் தோணுதா?
இதுல நடுவுல என்னவோ “புறவிசை” அப்படின்னு என்னவோ சொல்றாறே?
“புறவிசை” அப்படின்னு ஒரு கொக்கிப்பிடி போட்டு இருக்கார் பாருங்க!!!!,
என்னய்யா அதுல “கொக்கிப்பிடி”?
கொஞ்சம் பொறுங்க, உடனே சொல்லிட்டா எப்படி?
ஒரு ஸஸ்பென்ஸ்??

No comments:

Post a Comment