வில்லனா, ஹீரோவா இது?
அப்படின்னு முன்னால பார்த்தோம் இல்லையா?
அதுல “புறவிசை” அப்படீங்கிறது சில நேரங்களில் வில்லனாகவும், சில நேரங்களில் ஹீரோவாவும் செயலபடுது அப்படீன்னேன்.
இதுக்கெல்லாம் நியூட்டன் தான் காரணம்.
ஒரு கற்பனை!!
இயற்பியல் பிடிக்காத மாணவன் ஒருத்தன் சொன்னானாம், “ அந்த ஆப்பிள் தரையில் விழறதுக்கு பதிலா, நியூட்டன் தலையில விழுந்து இருக்ககூடாதா?”
“ஏன்டான்னு” வாத்தியார் கேட்டாராம்.
“அந்த ஆப்பிள் தரையில விழுந்ததைப் பாத்துத் தானே நியூட்டன் விதிகள் உண்டாக்கினார், அவர் தலையில விழுந்து இருந்தா விதிய கண்டுபிடிக்க அவர் இருந்து இருக்கமாட்டார் இல்லையா? நாமும் அத படிக்காம இருந்து இருக்கலாம் இல்லையா?”
எப்படி போறது பாருங்க பத்தி?
அவனுக்கு தோணல, நியூட்டன் இல்லைன்னா இன்னொருத்தர் விதிய கண்டு பிடிச்சு இருப்பார், ஏன்னா நியூடன்னுக்கும் முன்னாலேயும் ஆப்பிள் விழுந்துண்டு தானே இருந்தது.
அது போகட்டும், நாம விஷயத்துக்கு வருவோம்!
நியூட்டன் மூணு விதிய சொன்னார், அதுல முதல் மற்றும் மூன்றாம் விதிகள பாத்தோம் இல்லையா?
அப்ப இரண்டாம் விதி என்னன்னு கேட்கிறீர்கள் தானே?
அத சொலறதுக்கு முன்னால, பேப்பர்ல நீங்க அடிக்கடி இத பாத்து இருப்பீங்க!
“பறவை மோதியதில் விமானத்துக்கு சேதம்!
விமான ஓட்டியின் சாதுரியத்தால், பறவை மோதியதால பழுதான விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்”.
என்னய்யா விசித்திரமா இருக்கு, ஒரு சின்ன பறவை அவ்வளவு பெரிய விமானத்துல மோதியதுல, விமானத்துக்கு சேதமாம். என்ன கதையா சொலறீங்க?
இல்ல, நிஜந்தான்!
அங்க தான் இரண்டாவது விதி வருது!!!!
இந்த விதியில விசைய எப்படி அளக்கறதுன்னு ஒரு ஃபாரமுலா சொல்லி இருக்கார் நியூட்டன்.
நிறை அதிகமானால் விசை அதிகமாகுமாம். அது மட்டும் இல்லை, முடுக்கம் அப்படின்னு புதுசா ஒண்ணச் சொல்லி இருக்கார்.
அது என்ன முடுக்கம்,அப்படீங்கிறீரகளா?
நேரத்தை பொறுத்து திசைவேக மாறுபாடு முடுக்கம் எனப்படும்.
அதாவது முடுக்கம்
எனவே திசைவேக மாறுபாடு அதிகமானாலோ, நேரம் குறைந்தாலும் முடுக்கம் அதிகமாகும்.
எனவே விசை F என்பது நிறை, மற்றும் முடுக்கத்தின் பெருக்குத்தொகை ஆகும். இதனை இரண்டாம் விதி என்பர்.
இப்ப கொஞ்சம் யோஜனை பண்ணிப்பாருங்க, ஏன் பறவை ஆகாயவிமானத்தின் மிது மோதினால் விமானத்துக்கு சேதம் ஏறபடுதுன்னு.
விமானத்தின் நிறை மற்றும் அதன் வேகம் மிக அதிகமாக இருப்பதால் குறைவான நிறை கொண்ட பறவை மோதும் போது, விசை அதிகமாகி சேதம் அதிகம் ஏற்படுகிறது.
அதனால தான் நாம இருசக்கர வாகனத்தில் போகும் போது தலகவசம் அணிந்துகொண்டு செல்லுங்கள் என்று படித்து படித்து சொல்கிறார்கள்.

No comments:
Post a Comment