Friday, March 17, 2017

சுவர்க்கத்துக்கு போக பிசிக்ஸ் வழியா?
என்னது சுவர்க்கத்துக்கு நாம போகலாமா?
ஆன்மீகவாதிகலிடம் கேட்டால் சுவர்க்கம், நரகம் என்பது நாம் இருக்கும் இடத்திலேயே, நாம் வாழும் வழியில் இருக்கு என்பார்கள்.
விஞ்ஞானிகளிடம் கேட்டால் சுவர்க்கமா, நரகமா, அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்பார்கள்.
கொஞ்சம் சயின்ஸ் என்ன சொல்கிறது என்று பாப்போமா?

ஒரு பொருளை மேலே எறிந்தால் என்ன ஆகிறது. கொஞ்ச தூரம் மேலே போய்விட்டு கீழே வந்து விடுகிறது.
கொஞ்சம் அதிகமான வேகத்துடன் மேலே செலுத்தினால் இன்னும் கொஞ்சம் மேலே போய் விட்டு கீழே வந்து விடுகிறது.
எனவே எந்த வேகத்தில் செலுத்தினால் பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு திரும்பி வராமல் போய் விடுகிறதோ
அந்த வேகத்தைத் தான் விடுபடு திசைவேகம் என்பார்கள்.
அதாவது E என்ற திசையில் செலுத்தினால் திரும்பி
வராத இடத்துக்கு செல்வோமாம்.

ஆக இந்த பந்தத்தில் இருந்து (அதாவது உலக இன்ப துன்பங்களில் இருந்து விடுபட )
அறிவுப் பூர்வமாக சிந்தித்தால் ஒருவன், ஆன்மிகவாதி, விடுபடு திசை வேகத்தில் பயணித்தால் இந்த உலக பந்தத்தில் இருந்து விடுபடலாம்.
அது சரி, அந்த விடுபடு திசை வேகம் என்னன்னு சொல்லுங்கிரிர்களா? உடனே ஏற்பாடு பண்ணி இங்கிருந்து கிளம்பிடலாம், அப்படின்னு பார்க்கிறிர்களா?
சொல்லிட்டாப் போச்சு. பொதுவாக
எந்த ஒரு கிரஹத்தில் இருந்தும் வெளியேற, அதன் ஈர்ப்பு விசையில் இருந்து வெளிவரவேண்டும். அதற்கு மிக அதிகமான ஆற்றல் தேவை. ஆற்றலை இயக்க ஆற்றல் மற்றும் நிலையாற்றல் என்று சொல்லக்கூடிய ஈர்ப்பு ஆற்ரல் தேவை. அதனை பின்பரும் சமன்பாடு விளக்குகிறது.

 


 இதில் E​ என்பது இயக்க மற்றும் நிலை ஆற்றல் இவைகளின் கூட்டுத்தொகை எனக் கொண்டால், அதில் vinitial,ராக்கெட்டின் ஆரம்ப திசை வேகம் எனவும், mrocket என்பது ராக்கெட்டின் நிரை எனவும், Rearth பூமியின் ஆரம் எனவும், G ஈர்ப்பு மாறிலி எனவும் கொள்ளலாம். இந்த சமன்பாட்டை
 


பின்வருமாறு மாற்றி எழுதலாம். ராக்கெட் மேலே செல்லச்செல்ல, ஆற்றல் மாறாமல் இருப்பதால் மற்றும் vfinal என்பது இறுதி திசைவேகம் எனவும்,  rmaximum என்பது பெரும உயரம் எனக் கொள்ளலாம். எனவே சமன்பாடு பின்வருமாறு மாறும்.



பெரும உயரத்தில் திசைவேகம் விடுபடு திசைவேகம் ஆகும். பெரும உயரம், ஈரிலி ஆகும் இந்த சமயத்தில் சமன்பாடு,பின்வருமாறு மாறும்.

அதாவது விடுபடுதிசைவேகம், ராக்கெட் எந்த கிருஹத்தில் இருந்து ஏவப்படுகிறது மற்றும் அந்த கிருஹத்தின் ஆரத்தைப் பொறுத்து உள்ளது.எனத் தெரிகிறது,



Mearth = 5.98x1024 kg,பூமியின் நிறையையும், Rearth = 6.37x106 m பூமியின் ஆரத்தையும் பிரிதியிட,

 
 என வரும்.
பூமியில் இருந்து வான வழியில் செல்ல விடுபடு திசைவேகம் ( 11.2 km/sec), அதாவது ஒரு வினாடிக்கு 11.2 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால், பூமியின் இன்ப துன்பங்களில் இருந்து விடுபடலாமாம்.
ஈசியாகத் தானே உள்ளதுன்னு நினைப்போம். அந்த வேகம் என்ன தெரியுமா? மணிக்கு 40000 கிலோ மீட்டர் ஆகும்.
அதுசரி.
இதுவரை மிக அதிகமான வேகத்தைப் பெற்ற விமானம் மணிக்கு 7232 கிலோமீட்டர் வேகம் தான். பிரான்சில் உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய ரயில் மணிக்கு 515..3 கிலோமீட்டர் ஆகும்.
அது என்ன மணிக்கு 40000கிலோமீட்டர் வேகம் என்பது மனிதனால் அடையக்கூடிய வேகமா?
ஹப்பில் மற்றும் ஈன்ஸ்டின் போன்ற ஆராய்ச்சியாளர்கள் சொன்ன அண்டத்தை விட்டு சென்று பகவான் இருக்கும் சுவர்க்கத்தை அடைய, அதாவது நம்முடைய சூரியக் குடும்பத்தை விட்டுச் செல்ல வினாடிக்கு 42.1 கிலோ மீட்டர்  வேகத்தில் சென்றால் சுவர்க்கத்தை அடையலாமாம்.
அம்மாடியோவ் இந்த வேகத்து எங்க போவது? அதற்கான ராக்கெட்டுகள் இதுவரை உருவாக்கப்படவில்லை.
அப்படியானால் எப்படி சுவர்க்கம் போவது? அப்படியானால் சொர்க்கம் போக முடியாதா?
ஆக சொர்க்கம், நரகம் என்பது இருக்கோ அல்லது இல்லையோ, அதனப் பற்ரி எல்லாம் அறிவியல் கவலைப்ப்டாது, அதுக்கு கணக்கு மட்டும் தான் தெரியும்.
நாமும் சொர்க்கம், நரகம் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதன்பாட்டுக்கு நல்லதை நிநைச்சு, நல்லதையே சிந்திச்சு வாழ்க்கையை ஓட்டுவோம்.
அடுத்த முறை பிசிக்ஸ் என்ன சொல்கி்றது என்று பாப்போம்.

.

Friday, March 3, 2017

சமையல் அறையில் பிசிக்ஸ்!!!!!!!!!


சமையல் அறையில் பிசிக்ஸ்!!!!!!!!!

என்னது? சமையல் அறையில பிசிக்ஸா?

அப்படி என்னங்க சமையல் அறையிலே இருக்குனு நீங்க கேட்பது எனக்கு புரியுது. அப்படி என்ன தத்துவம் இருக்குன்னு பாக்கிறிங்களா?

முன்னால நான் எழுதின “ஆணிப் படுக்கையில் படுக்கலாம்”, அப்படின்னு தலைப்பை படிச்சிங்கன்னா, உங்களுக்குத் தெரிஞ்சு இருக்கும், அதுல கூர்மையா இருக்குற ஆயுதத்தில நாம் அதிமா அழுத்தம் கொடுக்க வேண்டாம்ன்னு சொன்னேன். குறைவான அழுத்தம் கொடுத்தாலே பொதும். அதே தான் இங்கேயும்.

அரிவாள்மனை காய்கறி நறுக்கப் பயன்படுத்துரோமே, அதப் பாருங்க, அது கூர்மையா இருப்பதால் தான் ஈசியா நறுக்க முடியுது  இல்லையா, அப்ப பிசிக்ஸ் தான் சமையல் அறையில் பயன்படுத்தப் படுகிறது இல்லையா.அதே போல கத்தியின் கூர்மை தான்







காய்கறியை நறுக்குது இல்லையா?
அது மட்டுமா? வேறே என்ன சார்ன்னு நீங்க கேட்பது காதுல விழுது.
 குறடு பாத்து இருப்பீங்க, சமையல் அறையில் ஆணி பிடுங்க கத்தரிக்கோல் பாத்து இருப்பீங்க இல்லயா, அது என்ன?
இவையெல்லாம் பிசிக்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்ப்போம்.



முடியுமா?
  முடியும்.   பாருங்கள், படத்தை!!!!
கட்ட்டம் கட்டும் கொத்தனார்கள், ஒரு பெரிய கடப்பாரையைப் பயன்படுத்தி, குறைவான முயற்சியில் நகர்த்திக் காட்டுவார்கள்.
இதுக்குப் பெயர் தான் நெம்புகோல் தத்துவம் என்பார்கள்.
அதென்ன நெம்புகோல் கொள்கைன்னு கேட்கிறீங்களா?
பார்க்கில சீசான்னு ஒரு விளையாட்டு, குழந்தைகள் விளையாடுவாங்களே, பாத்து இருப்பீங்க.அதுலெ குழந்தைகள் இரு பக்கமும் உக்காந்து இருப்பாங்க. ரெண்டு பக்கமும் சம்மான எடை இருந்தா, அது ஆடாது, ஆனா எந்தப் பக்கம் அதிகமான எடை இருக்கோ, அந்த பக்கம் இறங்கி விடும்.




நெம்புகோல் மூன்று விதம் உண்டு 
அத படத்துல பாருங்க
முக்கோணம் மாதிரி இருக்குல்ல அது இருக்கிற்தைப் பொறுத்து.நெம்புகோல் மூணு வகைப்படும் 

முதல் வகையில் முக்கோண மாதிரி இருக்கிற (சுழல் இடம்) கத்தி முனை   9நடுவுலெ இருநது, தூக்க வேண்டிய பொருள் பளு(சுமை) ஒரு பக்கமும் ,திறன்(முயற்சி) மற்றோரு பக்கமும் இருந்தால், அது முதல் வகை எனவும், கூறப்படும்
உதாரணம்:  கடப்பாரை, கத்தரிக்கோல்