Monday, April 16, 2018

மாயமில்லை மந்திரமில்லை







மாயமில்லை ,மந்திரமில்லை  !!!!!!

சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். அதனை இரண்டு படங்களாக காணபித்துள்ளேன்.
அதுல ஒரு பொம்மை பாத்திரத்தில் இருக்கும். பாத்திரத்தில் தண்ணீர் சேரத்துக்கொண்டே வருவார்கள்.அதன் வாய் வரை தண்ணீர் சேரப்பாரகள், தண்ணீர் அதிலேயே இருக்கும். ஆனால் வாய்கிட்ட நீர் வந்தவுடன் எல்லா தண்ணீரும் காலியாகிவிடும். மாயாபஜார் படத்துல கடோத்கஜன் எப்படி எல்லா ஆகாரத்தையும் சாப்பிடுவானோ, அதே மாதிரி இங்கு எல்லா நீரும் காலியாகிவிடும்.
பார், எப்படி எல்லா தண்ணீரையும் கடோத்கஜன் சாப்பிட்டு விட்டான் என்று பீத்திக்கொள்வாரகள்.(படம் 2)
என்னடா இது புதுசா இருக்கு?
நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சி ஆச்சரயமா இருக்கும்.
ஆந்திர மாநிலத்தில் ஒரு நரசிம்மர் சன்னிதியில, நாம பானகத்தை நரசிம்மர் வாயில் ஊத்தினா பாதிய எடுத்துண்டு மீதி பாதிய நமக்கு பிரசாதமா கொடுப்பார் என்றும் சொல்வார்கள். நீங்களும் கேட்டு இருப்பீர்கள்!!!
இதுல எந்த மாயமும இல்ல.
விஞ்ஞானத்தின் மூலமா இத விளக்கலாம். ஒண்ணுமில்லை, இது சைஃபன் என்ற தத்துவத்தில் வேலை செய்கிறது.
இந்த ஐடியாவ நம்ம வீட்டுல நாம பயனபடுத்துற WESTERN TOILET, பயனபடுத்துறாங்கன்னா பாத்து இருப்பீர்கள்?
படத்த பாருங்க, அதுல யூ மாதிரி இருக்கற இடத்துல எப்பவும் தண்ணி இருந்துண்டே இருக்கும் இல்லையா.

அது போலத்தான் படம் 2 ல காண்பித்தது போல ஒரு பிளாஸ்டிக் குழாய வச்சு அது மேல, குழாய் தெரியாம ஒரு பொம்மையை வைத்துடணும்.குழாயின் மறுமுனை பாத்திரத்தின் கீழ் வழியா கொண்டு போய் லீக் இல்லாமல் செய்துடணும்.
இப்ப பாத்திரத்தில் தண்ணி ஊத்தினா, தண்ணி வாய் வர வரைக்கும் ஒண்ணும் ஆகாது. வாயகிட்ட வந்தவுடன் எல்லா தண்ணியும் மேல அழுத்தம் இருக்கிறதால மறுமுனை வழியா வெளியேறிடும்.
இது தான் சைஃபன் தத்துவம்.
இத வச்சு தான் அந்த வாசுதேவ கிருஷ்ண பொம்மையும் வேலை செய்யுது.
அதுலயும் இந்த மாதிரி குழாய் வச்சுருப்பாங்க. தண்ணி கால தொட்டவுடன் எல்லா தண்ணியும் வெளியே வந்துடும்.
எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க!!
எப்படி பிசிக்ஸ் ஈசியா இருக்கு பாருங்க!!!!!

Saturday, March 24, 2018

வில்லனா, ஹீரோவா இரண்டாம் பகுதி

வில்லனா, ஹீரோவா இது?
அப்படின்னு முன்னால பார்த்தோம் இல்லையா?
அதுல “புறவிசை” அப்படீங்கிறது சில நேரங்களில் வில்லனாகவும், சில நேரங்களில் ஹீரோவாவும் செயலபடுது அப்படீன்னேன்.
இதுக்கெல்லாம் நியூட்டன் தான் காரணம்.
ஒரு கற்பனை!!
இயற்பியல் பிடிக்காத மாணவன் ஒருத்தன் சொன்னானாம், “ அந்த ஆப்பிள் தரையில் விழறதுக்கு பதிலா, நியூட்டன் தலையில விழுந்து இருக்ககூடாதா?”
“ஏன்டான்னு” வாத்தியார் கேட்டாராம்.
“அந்த ஆப்பிள் தரையில விழுந்ததைப் பாத்துத் தானே நியூட்டன் விதிகள் உண்டாக்கினார், அவர் தலையில விழுந்து இருந்தா விதிய கண்டுபிடிக்க அவர்  இருந்து இருக்கமாட்டார் இல்லையா? நாமும் அத படிக்காம இருந்து இருக்கலாம் இல்லையா?”
எப்படி போறது பாருங்க பத்தி?
அவனுக்கு தோணல, நியூட்டன் இல்லைன்னா இன்னொருத்தர் விதிய கண்டு பிடிச்சு இருப்பார், ஏன்னா நியூடன்னுக்கும் முன்னாலேயும் ஆப்பிள் விழுந்துண்டு தானே இருந்தது.
அது போகட்டும், நாம விஷயத்துக்கு வருவோம்!
நியூட்டன் மூணு விதிய சொன்னார், அதுல முதல் மற்றும் மூன்றாம் விதிகள பாத்தோம் இல்லையா?
அப்ப இரண்டாம் விதி என்னன்னு கேட்கிறீர்கள் தானே?
அத சொலறதுக்கு முன்னால, பேப்பர்ல நீங்க அடிக்கடி இத பாத்து இருப்பீங்க!
“பறவை மோதியதில் விமானத்துக்கு சேதம்!
விமான ஓட்டியின் சாதுரியத்தால், பறவை மோதியதால பழுதான விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்”.
என்னய்யா விசித்திரமா இருக்கு, ஒரு சின்ன பறவை அவ்வளவு பெரிய விமானத்துல மோதியதுல, விமானத்துக்கு சேதமாம். என்ன கதையா சொலறீங்க?
இல்ல, நிஜந்தான்!
அங்க தான் இரண்டாவது விதி வருது!!!!
இந்த விதியில விசைய எப்படி அளக்கறதுன்னு ஒரு ஃபாரமுலா சொல்லி இருக்கார் நியூட்டன்.
நிறை அதிகமானால்  விசை அதிகமாகுமாம். அது மட்டும் இல்லை, முடுக்கம் அப்படின்னு புதுசா ஒண்ணச் சொல்லி இருக்கார்.
அது என்ன முடுக்கம்,அப்படீங்கிறீரகளா?
நேரத்தை பொறுத்து திசைவேக மாறுபாடு முடுக்கம் எனப்படும். 


         

     


அதாவது    முடுக்கம் 



எனவே திசைவேக மாறுபாடு அதிகமானாலோ, நேரம் குறைந்தாலும் முடுக்கம் அதிகமாகும்.
எனவே விசை F என்பது நிறை, மற்றும் முடுக்கத்தின் பெருக்குத்தொகை ஆகும். இதனை இரண்டாம் விதி என்பர்.
இப்ப கொஞ்சம் யோஜனை பண்ணிப்பாருங்க, ஏன் பறவை ஆகாயவிமானத்தின் மிது மோதினால் விமானத்துக்கு சேதம் ஏறபடுதுன்னு.
விமானத்தின் நிறை மற்றும் அதன் வேகம் மிக அதிகமாக இருப்பதால் குறைவான நிறை கொண்ட பறவை மோதும் போது, விசை அதிகமாகி சேதம் அதிகம் ஏற்படுகிறது.
அதனால தான் நாம இருசக்கர வாகனத்தில் போகும் போது தலகவசம் அணிந்துகொண்டு செல்லுங்கள் என்று படித்து படித்து சொல்கிறார்கள்.

Wednesday, February 7, 2018

வில்லனா, ஹீரோவா?? முதல் பகுதி

வில்லனா, ஹீரோவா?? முதல் பகுதி.
“சார், சைக்கிள்ள டபுளஸ் அடிக்கணும்ன்னா, ஓட்டிண்டு போகும் போது உங்க மனைவிய ஏறச்சொல்றத விட்டுட்டு, இப்படி பின்னால உக்காத்திவச்சு ஸ்டாட் பண்ணிங்கன்னா கஷ்டமாக இருக்காதா சார்”
என்னுடய மாணவன் நான் என் மனைவியை வச்சு சைக்கிள் ஓட்டறதப் பாத்துட்டு தான் மேல சொன்ன கேள்வியை கேட்டான்.
“ஏம்ப்பபா இப்படி கேடகிறே?” மாணவனிடம் கேட்டேன்.
“நீங்க தான சார், பாடம் சொல்லிக் கொடுத்தீரகள், இந்த உதாரணத்தை.”
“நான் சொல்லிக்கொடுத்தேனா?”
“ஆமாம், சார் உராய்வு அப்படிங்கிற பாடத்த நடத்தற போது உராய்வு ரெண்டு வகைப்படும்,  ஒண்ணு நிலையான உராய்வு, (static friction) மற்றொன்று (dynamic friction) ஓடும் போது இயங்கு உராய்வுன்னு”
“ஆமாம் தம்பி. பரவாயில்லையே. நான் எப்பவோ நடத்தின பாடத்தை ஞாபகம் வச்சுண்டு எனக்கு சொல்றயே”
“இல்லையா சார், நீங்க நடத்துற பாடம் பசு மரத்து ஆணி போல பதிந்து இருக்கு சார், அப்பப்ப நீங்க சொலறத எல்லாம் ஞாபகம் வச்சுப்போம் சார்”.
“நன்றி தம்பி”.
மாணவன் சொன்னத மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்தேன்..
ஆமாம், நீங்களே பாத்து இருப்பீர்கள், நிறையபேர் சைக்கிள்ள டபுளஸ் அடிக்கும் போது, பின்னால உடகாரப்போகின்ற நபர் சைக்கிள் ஓடும் போது தான் ஏறுவார். அப்பத்தான் வண்டிய ஓட்டறவருக்கு எந்த சிரமும் இருக்காது.
இதுக்கு காரணம் உராய்வு குறைவா இருப்பதால் வண்டி வேகமாக ஓட்டமுடியும். 
சொல்லிப்பாருங்க, அவர் கிட்ட ஏம்பா இப்படி பணறேன்னு?
அவர் நம்மள பார்த்து, “”லூசா சார் நீங்க?” அப்படின்னு கேட்பார் இல்லையா?
ஆக உராய்வு ஓட்டத்தை தடை செய்கிறது. 
அப்ப இவன் வில்லன் தானே!!!!
இன்னொரு சம்பவம்!!!!
வில்லன் ஹீரோயினை காரில் கடத்தி சென்று கொண்டிருக்கிறான். பின்னால போலீஸ் துரத்திக்கொண்டு வருது. காருக்கு முன்னால் போய் போலீஸ், வில்லன் வண்டிய நிறுத்தச் சொல்லுது. வேறு வழியில்லாமல் வில்லன் பிரேக்கை அழுத்த கார திடிரென நிறுத்தப்படுகிறது.
கொஞ்சம் முன்னால யோசியுங்க.
எந்த தைரியத்தில போலீஸ் வில்லன் காருக்கு முன்னால போறது!!
உராய்வு  இருக்கும், பிரேக்க பிடிச்சு கார நிறுத்திடலாம என்ற தைரியத்தில் தானே!!!
ஆக உராய்வு ஹீரோ தானே!!!!
அப்ப உராய்வு விசை ரெண்டு வித்ததில் செயல்படுவது இல்லையா?
சில இடங்களில் தேவைப்பட்டது, சில இடங்களில் தேவைப்படல.
அப்படின்னா “உராய்வு” ங்கறது என்னங்க?
இயற்பியல்ன்னு, அல்லது பிஸிகஸ்ன்னு சொலறோமே அதுல நியூட்டன்   சும்மா இல்லாம மூணு விதிய சொல்லி இருக்கார். 
வாழ்க்கையே அதுல தாங்க இருக்கு!!!!
அதுல முதல் விதி, “புற விசை செயல்படாத வரை நிலையா இருக்கும் பொருள் நிலையாகவும், இயங்கும் பொருள் இயங்கிக்கொண்டும் இருக்கும்”
அப்படின்னு சொல்லிட்டாரு.
எவ்வளவு அருமையான விதி பாருங்க!!!
ஆமாங்க, வச்சது வச்ச இடத்துல இருக்கும், போய் கொண்டே இருக்கும் பொருள் போயக்கொண்டே இருக்கும்.
கொஞ்சம் சந்தேகம் வரதா?
எங்க சார், அந்த மாதிரி எல்லாம் எங்க சார் நடக்குது, அப்படின்னு சொல்லத் தோணுதா?
இதுல நடுவுல என்னவோ “புறவிசை” அப்படின்னு என்னவோ சொல்றாறே?
“புறவிசை” அப்படின்னு ஒரு கொக்கிப்பிடி போட்டு இருக்கார் பாருங்க!!!!,
என்னய்யா அதுல “கொக்கிப்பிடி”?
கொஞ்சம் பொறுங்க, உடனே சொல்லிட்டா எப்படி?
ஒரு ஸஸ்பென்ஸ்??

Tuesday, January 30, 2018

நான் உன் நிழல்!!!!!!!



நான் உன் நிழல்!!!!!!!
“நான் உன்னுடைய நிழலா இருப்பேன்”
“நீ நில்லு சொன்னா நிப்பேன், நடன்னு சொன்னா நடப்பேன்”
வீர வசனம் எல்லாம் மனைவியிடம் கணவன் கல்யாணம் ஆன புசுல  சொல்லுவான். ஆனா அப்படி இருப்பானான்னு பாத்தா ரொம்ப குறைவு தான்.
ஆனா அப்படி உன்னுடைய நிழலா இருப்பேன்னு சொல்ற ஒரே ஆள் சந்திரன் தான்.
நம்ம ப்ரண்டு சந்திரன் இல்லீங்க.
பின்ன யாருங்க?
அதாங்க, பூமிய விடாம சுத்திண்டு வர சந்திரன் தாங்க!!!
பூமியின் நிழலா இருக்கும் எப்பவுமே!,!!
பூமிக்கும், நிலவுக்கும் இடையேயான தொலைவு, கிட்டத்தட்ட, 3.84 லட்சம் கி.மீ.,ன்னு சொலறாங்க.  பூமியின் ஒரு பக்கம் சூரியனும், மறுபக்கம் சந்திரனும், ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வுகள், ஆண்டுக்கு ஒரு முறையேனும் நடக்கும்
'தானாக ஒளியை வெளியிடும் சக்தி, நிலவுக்குக் கிடையாது; தன் மீது விழும் சூரிய ஒளியைத்தான், அது பிரதிபலிக்கிறது. இதத்தான் நாம சாதாரண நாட்கள்ள சந்திரனின் வெவ்வேறு நிலைகளா பார்க்கிறோம்.
ஆனா
சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே, பூமி வரும் போது ஏற்படுகிறது. இதனால், சூரியன் - பூமி - நிலவு ஆகியவை நேர் கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி, நிலவின் மீது படாத நிலை ஏற்படுகிறது. அதாவது பூமியின் நிழல்  சந்திரன் மீது விழும்.
இதை தான், சந்திர கிரகண நிகழ்வு என்கிறோம்.
படத்தப் பாருங்க புரியும்.








முதல் படத்தில் பூமியின் நிழல் முழுதுமா சந்திரனல விழறதினால அது முழு சந்திர கிரஹணம். இரண்டாவது படத்துல் பூமியின் நிழல்  பாதி விழறதுனால அது பாதி கிரஹணம்ன்னு சொல்லுவாங்க.
வருஷத்துக்கு ஒரு தடவையாவது இந்த நிகழ்வு நடைபெறலாம்.
இந்த வருஷம் ஸ்பெஷல்.!
ஏன்னா?
:1. ஒரே மாதத்தில் இரண்டு முழுநிலவு, வந்தா அத 'புளு மூன்' என, அழைக்கப்பாங்க. அபூர்வமாக இந்த நிகழ்வு ஏற்படுவதால், இப்படி அழைக்கப்படுகிறது
2. நிலவு நீல நிறத்தில் தெரியும் எனக் கருத வேண்டாம்; அப்படி இருக்காது. விண்வெளியில் உள்ள மாசை பொறுத்து, இன்று சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படலாம்.
3. அதோட இல்லாமல் இன்றைக்கு சந்திரகிரஹணமாகவும் அமைந்துவிட்டது.
இது அடிக்கடி நிகழ்வது இல்லை., 152 ஆண்டுகளுக்குப்பின் இன்று நடக்கிறது. இது, உலக அளவில், வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தெரியும். இந்தியாவில், இன்று மாலை, 5:15 மணிக்கு சந்திர கிரகணம் துவங்குகிறது.
சாதாரணமாக தெரியும் நிலவை விட, 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் இருக்கும்.
எங்கெல்லாம் தெரியும், மற்றும் பல விஷயங்கள் போட்டோவில் காட்டியிருக்கேன்.



பாரக்கத் தவறாதீர்கள். கிரகண சமயத்தில் சாப்பிடலாமான்னு கேட்பது காதுல விழறது. அதப்பத்தி சயின்ஸ் எதுவும் சொல்லாதுங்க
அது உங்க இஷ்டம் !!!