Sunday, April 16, 2017

கீதோபதேசத்தில். பிஸிக்ஸ்
என்னப்பா  கீதோபதேசத்தில் பிஸிக்ஸா?
அப்படின்னு கேட்கத் தோணுதா?
கீழே கொடுத்துள்ளது நமக்கு எல்லாம் தெரிந்த கீதை வாக்கியங்கள். அதுலெ கொஞ்சம் கருப்பா தெரியுதே அதப் படிங்க. அதுல தாங்க பிசிக்ஸ் இருக்கு.
எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை இழப்பதற்கு?
                      
எதை நீ படைத்திருந்தாய்,
                       அது வீணாவதற்கு?
                       எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
                      அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
                      எதை கொடுத்தாயோ,
                      அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
                      எது இன்று உன்னுடையதோ,
                     அது நாளை மற்றொருவருடையதாகிறது
நாம எங்க படைத்தோம்?  நாம எங்க எடுத்துக்கொண்டோம், அது இங்கிருந்தே எடுக்கப்பட்ட்து, அதேபோல எது இன்னைக்கு நம்முடையதோ அது நாளைக்கு மத்தவன் உடையதாகிறது.
இந்த வாசகங்கள் பிஸிக்ஸ்ல் ஒரு முக்கியமான விதியை நினைவு படுத்துகிறது, அப்படின்னு சொல்ல வரேன்.
இன்னைக்கு உன்னோடது நாளைக்கு இன்னொருத்தனுடையது, அப்படின்னு கீதோபதேசம் சொல்றது, பிஸிக்ஸ்க்கு அப்படியே பொருந்தும்.
பிசிக்ஸ்ல ஆற்றல் அழிவின்மை விதின்னு ஒண்ணு இருக்கு. அதாவது
ஆற்றல அழிக்கவோ ஆக்கவோ முடியாது. உலகத்துல உள்ள மொத்த ஆற்றல் மாறாதது. அதாவது ஒரு ஆற்றல் அழிவது போல இருந்தா அது மற்றொரு ஆற்றலா மாறும்
இந்த விதிதான் கீதோபதேச வரிகளுக்கு சரியாப் பொருந்தும்.
எப்படின்னு கேட்கிறீங்க்களா?
இப்ப வீட்டுல துணிகளுக்கு இஸ்திரி போடப் போறீங்க்கன்னு வச்சுக்குங்க, (புரியது எப்பவும் எங்க வீட்டுக்கார்ர் தான் இஸ்திரி போடுவார்ன்னு சொல்றீங்க, எனக்கு அதப் பத்தித் தெரியாது ) என்ன பண்ணுவீங்க. இஸ்திரி பெட்டிய மின் இணைப்போட இணைப்பீங்க இல்லையா?
அப்ப என்ன நடக்குது?
மின்சாரம் இஸ்திரி பெட்டி வழியா பாஞ்சு, பெட்டிய சூடாக்குது இல்லையா. அதாவது மின்னாற்றல் வெப்ப ஆற்றலா மாறுது. ஈசியா இஸ்திரி பண்ன முடியுது.
இதத்தான் ஆற்றல் அழிவின்மை விதியின் உதாரணம். இது மாதிரி நிறைய உதாரணங்கள் கொடுக்கலாம்.
இந்த விதி மூலம் தான் நாம ஒரு ஆற்றல இன்னொரு ஆற்றலா மாற்றமுடியும் என தெரிந்து, அதன் மூலம் நமக்கு வேண்டிய ஆற்றலா மாற்றிக்கொண்டு வருகிறோம்.
எவ்வளவு அரிய கண்டுபிடிப்பு பாருங்க!!!!!!
அது சரி, இதுல எங்க கீதை வருது? இல்லையா பின்ன,
நாம எங்க உற்பத்தி பண்ணோம், எல்லாம் இங்கேயெ இருக்கு, ஒண்ண இண்ணொண்ணா மாத்தறோம் இல்லையா. அப்ப கீதை பிஸிக்ஸ் தானே/
பின்கண்ட படத்தப் பாருங்க. அதுல ஒரு பந்து மேலே இருந்து கீழே விழறது.
பந்து மேலே இருக்கும் போது மொத்த ஆற்றல் என்னவோ, அந்த ஆற்றல் கீழே தரைக்கு வந்த பிறகு அதே தான் இருக்கும். நடுவில எதாவது புள்ளிய எடுத்துண்டா, அங்க மொத்த ஆற்றல் இயக்க ஆற்ரல் மற்றும் நிலையாற்றல் என்றவைகளின் கூட்டுத் தொகையாக இருக்கும்.
                  படம் 1                              படம் 2
படம் 1 மேலே சொன்ன விளக்கதுக்கு ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படம் 2 உயரமான இடத்தை நோக்கிச் செல்லும் போது நிலையாற்றல் அதிகரிக்கும் என்பதையும், கீழே வந்தவுடன் இயக்க ஆற்றல் பெருமமாகும் என்பதையும் விளக்குகிறது
                
அணைகள் தண்ணிய சேமித்து வச்சு, அத டர்பைன் வழியா செலுத்தி மின்சார ஆற்றல் உண்டாக்குறாங்க இல்லையா, அங்க நிலையாற்றல் மின்னாற்றலா மாறுது.
சூரிய ஆற்றல் மின்னாற்றலா சோலார் செல் என்பதில் மாற்றப்படுகிறது.

மின்சார பல்புல மின்னாற்றல் பெரிய அளவில ஒளி ஆற்றலாவும், சிறிதளவு வெப்ப ஆற்றலாவும் மாற்றப்படுகிறது இல்லையா?
இது மாதிரி நிறைய உதாரணங்கள் ஆற்றல் அழிவின்மை விதிக்கு கொடுக்கலாம்.
ஒரு வினாடியில் ஏற்படும் மின்னல ஆற்றல சேமித்து வச்சா அத மின்னாற்றலா மாற்ற முடியும். இதன் மூலம் நிறைய நகரங்களுக்கு மிசாரம் அதிக செலவின்றி கொடுக்கமுடியும்ன்னு சொல்றாங்க.

இது மட்டும் இல்ல, நம்மாழ்வார் தன்னுடைய திருவாய்மொழி ஐந்தாம் பத்தில் கடல் என்ற தலைப்பில், பராங்குச நாயகி சொல்வது போல 

எல்லாம் நானேயாக இருக்கிறேன்என்று சொல்கிறார்.

     ‘காண்கின்ற நிலமெல்லாம் நானேஎன்னும்
       ‘காண்கின்ற விசும்பெல்லாம் நானேஎன்னும்
    ‘காண்கின்ற வெந்தீயெல்லாம் நானேஎன்னும்
       ‘காண்கின்ற இக்காற்றெல்லாம் நானேஎன்னும்
    ‘காண்கின்ற கடலெல்லாம் நானேஎன்னும்
       காண்கின்ற கடல்வண்ண னெறக் கொல்லோ?
    காண்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
       காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே? 3174
இப்படி பிஸிக்ஸ் எங்கெல்லாம் பயன்படுது பாருங்கள்!!!!
கொசுறா ஒரு செய்தி!!!!          
உண்ணாவிரதம் இருக்குறவங்க அதிகமா பேசமாட்டங்க இல்லையா? ஏன்? ஆற்றல் வீணாயிடும் தான்.

அடுத்த எபிஸோடுல வேறொரு விஷயத்தைப் பெற்றிப் பேசுவோம்.



1 comment:

  1. விளக்கங்கள் அருமை ஐயா...

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete